Home One Line P1 கொவிட்19 நோயாளிகள் வாக்களிக்க அனுமதி இல்லை

கொவிட்19 நோயாளிகள் வாக்களிக்க அனுமதி இல்லை

837
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் சனிக்கிழமை நடைபெறும் சபா தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அண்மையில் மாநிலத்தில் தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்படுவதாக, தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

ஆயினும், காய்ச்சல், இரும்பல் போன்ற அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆரோக்கியமற்ற, அறிகுறி வாக்காளர்களுக்காக ஒரு சிறப்பு வாக்களிப்பு முகப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

“நாங்கள் முழுமையாகப் பேசினோம். பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை. வாக்களிப்பு தொற்றுக் குழு உருவாக நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.