கோலாலம்பூர்: ஜாலான் ராஜா லாவுட் 1 பெயரை, ஜாலான் பாலஸ்தீன் என்று பெயர் மாற்ற மாட்டோம் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா இன்று தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நேற்று ஜாலான் ராஜா லாவுட் 1- ஐ ஜாலான் பாலஸ்தீனமாக மறுபெயரிட்டதாகவும், இது பாலஸ்தீனத்திற்கு மலேசியாவின் ஆதரவின் அடையாளமாகும் என்றும் கூறியது.
“மாநகராட்சி மன்றத் தலைவர் ஜாலான் பாலஸ்தீன் என்று பெயரிட மிகவும் பொருத்தமானப் பெயரைக் கண்டறியும்” என்று அனுவார் இன்று தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்தார்.
“ஜாலான் ராஜா லாவுட் 1- ஐ அப்படியே பராமரிக்க வேண்டும்.”
கடந்த ஆண்டு மெர்டெகா சதுக்கத்தில் நடைபெற்ற வருடாந்திர குவாட்ஸ் விழாவின் போது சாலையின் பெயரைக் கொண்டுவருவதற்கான முன்மொழிவு கொண்டுவரப்பட்டதாக மாநகராட்சி மன்றம் கூறியிருந்தது.