Home One Line P1 நிபோங் தெபாலில் 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு

நிபோங் தெபாலில் 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு

639
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: நிபோங் தெபாலில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் 23 குடும்பங்களின் தலைவிதி நிச்சயமற்றதாக மாறி உள்ளது.

சம்பந்தப்பட்டக் குடும்பங்களுக்கு நில உரிமையாளர்களிடமிருந்து அங்கிருந்து வெளியேற அறிவிப்பு வந்துள்ளது.

பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி கூறுகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் லாடாங் சுங்கை கெசிலின் 2.4 ஹெக்டேரை ஒரு தனியார் நில உரிமையாளரிடமிருந்து வாங்க மாநில அரசு ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“துரதிர்ஷ்டவசமாக, நிலத்தை சந்தை விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை நில உரிமையாளர் மறுத்துவிட்டார். கொவிட்19- க்கு முன்பு, உரிமையாளர் நிலத்தை பினாங்கு இந்து அறவாரியத்திடம் விற்பதாக ஒப்புக்கொண்டார்.

“தற்போது அக்குடும்பங்களுக்கு வெளியேற்ற அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இடிப்பு வேலைகளுக்கு வழிவகை செய்ய அவர்கள் அக்டோபர் 7- ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும்” என்று வாரியத் தலைவரான இராமசாமி கூறினார்.

அடுத்த வாரம் நிலத்தின் கட்டுமானங்களை இடிக்க நில உரிமையாளர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளார் என்று அவர் கூறினார்.

“உரிமையாளர் அங்கு குடும்பங்கள் மற்றும் கோயில்கள் இருப்பதை அறிந்து நிலத்தை வாங்கினார். சந்தை விலையில் நிலத்தை வாங்க மாநிலம், வாரியம் வழியாக பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம், ” என்று அவர் கூறினார்.

இடிப்பு குறித்து செபெராங் பெராய் நகராட்சி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இராமசாமி கூறினார். காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

முந்தைய உரிமையாளரிடமிருந்து தங்கள் வீடுகளை வாங்கியதாகக் கூறிய 23 குடும்பங்களை நில உரிமையாளர் வெளியேறக் கூறியுள்ளார்.