கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 5) முதல் ஒளிபரப்பு காணவிருக்கிறது புதிய தோற்றத்திலான “விழுதுகள்: சமூகத்தின் குரல்” எனும் நேரலை உரை நிகழ்ச்சி.
அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் விழுதுகள்: சமூகத்தின் குரல் நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 மணிக்கு, தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோ வழியாகவும், மறு ஒளிபரப்பை மறுநாள் காலை 9.30 மணிக்கும் கண்டு களிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கங்களை எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து பார்த்து மகிழலாம்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் புதிய நடுநிலையாளர்கள், தொகுப்பாளர்களின் விவரங்களை இங்கே காணலாம்:



ஆஸ்ட்ரோ விழுதுகள் தொகுப்பாளர்கள் :





