Home One Line P1 பிரதமர் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்

பிரதமர் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்

756
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.

கொவிட்19 தொற்று பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத விவகார அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரி அறிவித்தை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்.

ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தாம் கொவிட்19 பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளதாகவும், இன்றுவரை அனைத்து சோதனைகளும் எதிர்மறையாக வந்துள்ளதாக மொகிதின் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, சுல்கிப்ளி அல்-பக்ரி கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நல்ல நிலையில் உள்ளதாகவும் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.