Home One Line P2 ராகா வானொலி : அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான சிறப்பு நிகழ்ச்சிகள்

ராகா வானொலி : அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான சிறப்பு நிகழ்ச்சிகள்

854
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்த வாரத்தில் ராகா வானொலியில் ஒலியேறும் சில சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு :

புதன், 7 அக்டோபர்

நேர்காணல்: நெருப்பைத் தடுக்கக்கூடிய நடைமுறைகள்
ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: திரு. கண்ணன், தீயணைப்பு வீரர்

#TamilSchoolmychoice

நெருப்பைத் தடுக்கக்கூடிய நடைமுறைகளைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளும் தீயணைப்பு வீரர், திரு. கண்ணனின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம். அவர் ஒரு தீயணைப்பு வீரராக தனது வாழ்க்கை அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்வார்.

வியாழன், 8 அக்டோபர்

நேர்காணல்: திரு. சுரேஷின் வாழ்க்கை பயணம்
ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

விருந்தினர்: திரு. சுரேஷ்

தான் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பார்வை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு செய்த சமூக சேவைகள் உள்ளிட்ட தனது வாழ்க்கை பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் பார்வையற்ற, திரு. சுரேஷின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

வெள்ளி, 9 அக்டோபர்

நேர்காணல்: பாஷினி சிவகுமாருடன் ஒரு நாள்
ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

விருந்தினர்: பாஷினி சிவகுமார், நடிகை

இளம், ஆர்வமுள்ள நடிகர்கள் அல்லது நடிகைகளை ஊக்குவிக்கும் வண்ணம் தனது வாழ்க்கை மற்றும் வெற்றிக் கதைகளைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளும் பிரபல உள்ளூர் நடிகையான பாஷினி சிவகுமாருடனான ஒரு நேர்காணலை ரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை