பெய்ஜிங்: சினாவில் கிங்டாவ் நகரத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொவிட்19 பரிசோதனை செய்யப்படவிருக்கிறது. கிட்டத்தட்ட 90 இலட்சம் பேர் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
சீனாவில் கொவிட்19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கிங்டாவ் நகரத்தில் புதிதாக 12 பேருக்கு அத்தொற்றுக்கான அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து தற்போது முழு நகரமும் பரிசோதனைக்கு ஆளாகியுள்ளது.
பாதிக்கபப்ட்ட 12 பேரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர். இதைத் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குள் முழு கிங்டாவ் நகரமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த தொற்று உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமனோர் இறந்துள்ளனர்.
இப்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொவிட்19 தொற்று அதிகமாகப் பதிவிடபப்டுகிறது. ஆனால், சீனாவில் கொவிட்19 பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீன நாடும் அதன் பொருளாதார வளர்ச்சியும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.