Home One Line P1 செல்லியல் காணொலி: அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்தித்தார்

செல்லியல் காணொலி: அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்தித்தார்

659
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னர் – பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இடையிலான சந்திப்பு பரபரப்பான சூழ்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்தேறியது.
காலை 11.00 மணியளவில் அரண்மனையை வந்தடைந்த அன்வார் இப்ராகிம் மாமன்னருடன் நடத்திய சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
அந்த சந்திப்பைத் தொடர்ந்து அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவிலிருந்து வெளியேறினார். எனினும் பத்திரிகையாளர்கள் அவரது காரை நெருங்கியபோது அவரது கார் நிறுத்தப்படவில்லை. அன்வார் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் அரண்மனையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அன்வார் இப்ராகிம் தலைநகரிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மான்னருடனான சந்திப்பின் விவரங்களை அப்போது விரிவாக விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குவாங் மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான தெங்கு ரசாலி ஹம்சா இன்று பிற்பகலில் மாமன்னரைச் சந்திப்பார் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அண்மைய அரசியல் நடப்புகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து செல்லியல் இணைய ஊடகத்துடன் இணைந்திருங்கள்.