Home One Line P1 செல்லியல் காணொலி : கட்சித் தலைவர்களுடனான மாமன்னரின் சந்திப்புகள் இரத்து

செல்லியல் காணொலி : கட்சித் தலைவர்களுடனான மாமன்னரின் சந்திப்புகள் இரத்து

644
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொடர்பான நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களுடனான சந்திப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா முடிவு செய்துள்ளார்.

சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக இந்த சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுவதாக மாமன்னர் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சந்திப்புக்கான புதிய தேதிகள், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு முடிந்த பிறகு முடிவு செய்யப்படும்.

அன்வார் இப்ராகிமுடன் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மாமன்னரை அடுத்தடுத்து சந்திக்கவிருந்தனர்.

அன்வாரைச் சந்தித்த அன்றே அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலியைச் சந்தித்த மாமன்னர், வியாழக்கிழமை அக்டோபர் 15-ஆம் தேதி அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியையும், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனையும் சந்திப்பார் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே வேளையில், ஜனநாயக செயல்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு ஆகிய இருவருடனான சந்திப்புகளை மாமன்னர் இரத்து செய்தார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்று மாலையில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புகளின்படி கட்சித் தலைவர்களுடனான அனைத்துச் சந்திப்புகளையும் மாமன்னர் இரத்து செய்துள்ளார்.