பெய்ஜிங்: சீனாவின் கிங்டாவோ நகரில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் பொட்டலத்தில் கொவிட்19 நச்சுயிரி வாழும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உணவுப் பொட்டலங்களின் மேற்பரப்பில் இந்த நச்சுயிரி கண்டறியப்பட்டது இதுவே முதன்முறையாகும். சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உணவுப்பொருள் எந்த நாட்டிலிருந்து அங்கு இறக்குமதி செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இந்த பொட்டலங்களைத் தொடுகிறவர்களை கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து பரவத் தொடங்கிய கொவிட்19 தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்19 தொற்றுக்கு மருந்து கண்டறிய உலகம் முழுவதும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.