கோலாலம்பூர்: சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் ஒப்புதல் பெற்ற பின்னர் சுபாங் ஜெயா அதிகாரப்பூர்வமாக நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுபாங் ஜெயா நகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே) இன்று முதல் சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஜே) என்று அழைக்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
எம்பிஎஸ்ஜே தலைவர் நோரெய்னி ரோஸ்லான் உடனடியாக சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
“சுபாங் ஜெயா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிலையான வளர்ச்சி அதன் உலகத் தரம் வாய்ந்த சேவை விநியோக முறை மூலம் தொடர்ந்து மேம்படுத்தப்படட்டும்.
“கடவுளின் ஆசீர்வாதத்துடன், இதன மூலம் ‘சிலாங்கூர் மஜு பெர்சாமா’ மாநில நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்க முடியும்” என்று அமிருதின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.