Home One Line P2 ‘ராகா ஐடல்’ நிகழ்ச்சி வழி உள்ளூர் இளம் திறமைசாலிகளை வளர்க்கும் ராகா

‘ராகா ஐடல்’ நிகழ்ச்சி வழி உள்ளூர் இளம் திறமைசாலிகளை வளர்க்கும் ராகா

603
0
SHARE
Ad

கோலாலம்பூர் : திறமையான மலேசியர்கள் சமீபத்தில் ராகாவின் பாடல் திறன் போட்டியான ‘ராகா ஐடலில்’ பங்கேற்றனர். யுவனேஷ் முனியாண்டி முதல் இடத்தையும்; ஷக்தீஸ்வர் சண்முகவேலாயுதம், இரண்டாம் இடத்தையும்; மற்றும் அமோஸ் போல் முருகேஷ், மூன்றாம் இடத்தையும் வாகை சூடியதோடு பிரபல உள்ளூர் இசை இயக்குனர்களான சுந்தரா, ஜெய் மற்றும் போய் ராட்ஜுடன் தங்களது முதல் பாடலைப் பதிவுசெய்யும் அரிய வாய்ப்பையும் பெற்றனர். மூவரும் ‘ராகா ஐடலில்’ பங்கேற்ற தங்களின் அனுபவத்தையும் அற்புதமான தருணங்களையும் ராகா இரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டனர்.

ராகா ஐடல் வெற்றியாளர்கள் யுவனேஷ் – சக்தி ஈஸ்வர் – அமோஸ்

அவர்களின் அனுபவங்களை கீழ்க்காணும் பேட்டியின் மூலம் அந்த மூவரும் விவரித்தனர்:

கேள்வி : ஒரு பாடகராக உங்கள் அனுபவம் மற்றும் உத்வேகம் பற்றி மேலும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

o      யுவனேஷ்: நான் என் 19 வயதிலிருந்தே பாடிக்கொண்டிருக்கிறேன். எனது பள்ளி நாட்களிலிருந்து கல்லூரி வரை பல பாடும் வாய்ப்புகளைப் பெற்றேன். எனக்கு பிடித்த 80 மற்றும் 90களில் வெளிவந்த பாடல்கள் மற்றும் பிற பாடல்களைக் (cover songs) கேட்பதன் வழி ஒரு சிறந்த பாடகராக வேண்டும் என்ற உத்வேகத்தைப் பெற்றேன். மசாலா காபி பேண்டைச் (Masala Coffee Band) சேர்ந்த சூராஜ் சந்தோஷ் மற்றும் சித் ஸ்ரீராம் எனது ஐடலாவர்.

ராகா ஐடல் வெற்றியாளர் – யுவனேஷ் முனியாண்டி
#TamilSchoolmychoice

o      ஷக்தீஸ்வர்: ஒரு பாடகராக எனது அனுபவம் பல தோல்விகளைக் கொண்ட கடினமான ஒன்றாகும். இத்தோல்விகள் ஒரு சிறந்த பாடகராவதற்கான எனது நம்பிக்கையை வளர்க்க உதவியது. ஒவ்வொரு அனுபவமும் எனக்கு ஒவ்வொரு அற்புதமான பாடத்தைக் கற்பித்தன. அது வீண் போகவில்லை. ‘ராகா ஐடல்’ வெற்றியாளர்களில் ஒருவராக இன்று நான் இருப்பதற்கு அவை முக்கியப் பங்காற்றின. ஒரு சிறந்த பின்னணி பாடகராக வேண்டும் என்ற எனது கனவுதான் ஒரு பாடகராக என்னைத் தூண்டியது. உள்நாட்டில் பல்வேறு திட்டங்களில் பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன். மேலும், எதிர்காலத்தில் ஓர் அனைத்துலக பின்னணி பாடகராக இருப்பதோடு, மலேசியர்களையும் உள்ளூர் இசைத் துறையையும் பெருமைப்படுத்துவேன் என பெரிதும் நம்புகிறேன்.

o      அமோஸ்: கவர் பாடல்களைப் பாடியதன் வழி ஒரு பாடகராக எனது பயணம் இனிதே தொடங்கியது. பல தடைகளை சந்தித்தபோதும் அதனைக் கண்டு அஞ்சாமல் முயற்சியை ஒருபோதும் கைவிடாமல் என் வெற்றியை நோக்கி விரைந்து ஓடினேன்.

‘ராகா ஐடலில்’ பங்கேற்றதோடு உங்களின் முதல் பாடலைப் பதிவுசெய்யும் அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

ராகா ஐடல் – இரண்டாம் நிலை வெற்றியாளர் சக்தி ஈஸ்வர் சண்முக வேலாயுதம்

o      யுவனேஷ்: 2016 முதல் நான் ஒரு மேடை பாடகராக இருந்ததாலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடிய அனுபவத்தைப் பெற்றதாலும், எனது பலவீனத்தை அடையாளம் காண முடிந்தது. ஒரு பாடலைப் பாடும்போது எனது உச்சரிப்பே எனது பலவீனமாக இருந்தது. ஆகவே, ‘ராகா ஐடல்’ இறுதிச் சுற்றின் போது நான் இதில் அதிக கவனம் செலுத்தினேன். அது இறுதியில் எனது மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. முதல் பாடலுக்கு என்னுடைய சிறந்ததை வழங்க நான் எதிர்பார்க்கிறேன்

o      ஷக்தீஸ்வர்: என்னை மென்மேலும் மேம்படுத்த ஒரு சிறந்த உந்து சக்தியாக இருந்ததோடு ‘ராகா ஐடல்’ ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது. அதுமட்டுமின்றி, எனது சமூகம் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைய ஒரு சிறந்த ஊடகமாக விளங்கியது. மலேசிய இசைத் துறையில் படர்ந்துள்ள வாய்ப்புகள், எனது பலம், பலவீனம் போன்றவற்றை அடையாளம் காண முடிந்தது. எனது முதல் பாடலைப் பதிவு செய்வது எனது கனவாக இருந்தது. இப்போது, என் நீண்ட நாள் கனவு நனவாகியது போல் தோன்றுகிறது! எனது சாதனையால் நான் பெருமையடைவதோடு பிரபல உள்ளூர் இசை இயக்குனர், ஜெய்யுடன் எனது முதல் பாடலைப் பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். எனது முதல் பாடலுக்கு எனது சிறந்ததைக் கொடுக்க ஆர்வமாக உள்ளேன்.

ராகா ஐடல் – மூன்றாம் நிலை வெற்றியாளர் – அமோஸ் பால் முருகேஷ்

o      அமோஸ்: மேடை பயத்திலிருந்து வெளியேற உதவியது ‘ராகா ஐடல்’. பாடும்போதும் துல்லியமான உச்சரிப்பின் முக்கியத்துவத்தையும்  மேடை இருப்பைப் பராமரிக்கும் அவசியத்தையும்  கற்றுக்கொடுத்தது.

உள்ளூர் இந்திய இசைத் துறையில் உள்ளூர் இளம் திறமைகளை வளர்ப்பதில் ராகா வழங்கிய வாய்ப்புகள் குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன?

o      யுவனேஷ்: எங்களின் திறமைகளை வெளிப்படுத்த, எனக்கும் மற்ற இளம் திறமைகளுக்கும் முக்கியமாக இத்தொற்றுநோய் காலகட்டத்தில் ஓர் அறிய வாய்பை வழங்கியது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. நன்றி, ராகா.

o      ஷக்தீஸ்வர்: இளம் திறமைகளை வளர்த்தமைக்காகவும், எங்கள் திறன்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்கியதற்காகவும் ராகாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உள்ளூர் திறமைகளை தக்க நேரத்தில் அடையாங் கண்டு பிரபலமடைய செய்யும் ராகாவின் தொடர்ச்சியான முயற்சிகள் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

o      அமோஸ்: ராகாவுக்கு மிகப்பெரிய நன்றி. ஆர்வமுள்ள உள்ளூர் பாடகர்கள் பலர் உள்ளனர். இவ்வகையான வாய்ப்புகள் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், உள்ளூர் இசைத் துறையில் அனுபவத்தை பெறுவதோடு அங்கீகாரம் பெறவும் உதவுகின்றன.

மேலும் பல புதிய தகவல்களுக்கும் வரவிருக்கும் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை அறியவும் SYOK செயலியில் ராகாவை பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.