சிலாங்கூர் நீர் ஆணையம் (லுவாஸ்) மற்றும் சுற்றுச்சூழல் துறை (டிஓஇ) ஆகியவற்றுடன் இணைந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சிலாங்கூர் காவல் துறை தலைவர் நூர் அசாம் ஜமாலுடின் தெரிவித்தார்.
விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும், மாசுபாட்டின் உண்மையான காரணம் அல்லது இருப்பிடத்தைக் கண்டறிய நீர் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“இந்த செயல்முறைக்கு நேரம் எடுக்கும். நிபுணர்கள் மற்றும் தடயவியல் உதவி தேவைப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண பகுதி மற்றும் சுற்றுச்சூழல் துறை உதவியுடன் நாங்கள் விசாரித்து வருகிறோம்
“மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 430-இன் படி, விசாரணை நடத்தப்படுவதாக அவர் கூறினார். மாசுபாட்டிற்கான சரியான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
சில தொழிற்சாலை பகுதிகள் மாசுபாட்டிற்கான காரணம் என அடையாளம் காணப்பட்டதாகவும், சிலாங்கூரைச் சுற்றி இயங்கும் சட்டவிரோத தொழிற்சாலைகளால் கழிவுப்பொருட்கள் அகற்றப்படுவதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.