Home One Line P1 முவாபாக்காட் நேஷனலை முறையாக பதிவு செய்ய அம்னோ-பாஸ் முடிவு

முவாபாக்காட் நேஷனலை முறையாக பதிவு செய்ய அம்னோ-பாஸ் முடிவு

453
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனலை  மலேசியா சங்கப் பதிவாளரிடத்தில் முறையாக பதிவு செய்ய அம்னோவும் பாஸ் கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த விஷயத்தை அதன் பொதுச் செயலாளர்கள் – அனுவார் மூசா மற்றும் தக்கியுடின் ஹசான் ஓர் அறிக்கையில் அறிவித்தனர்.

“முவாபாக்காட் நேஷனல் தலைமை ஒன்றிணைந்து, வரவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலுக்கான தயார் நிலையில் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் என்று உறுதியளித்துள்ளது, ” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

#TamilSchoolmychoice

கிள்ளான் பள்ளத்தாக்கில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இரு கட்சிகளும் நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் குழு கூட்டத்தை ஒத்திவைத்தன. அதனை அடுத்து இந்த முடிவு இன்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், கூட்டணியில் பெர்சாத்துவின் நிலை குறித்தும், அதன் பங்கேற்பு இறுதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த ஆகஸ்டு மாதம், முவாபாக்காட் நேஷனலால் அழைக்கப்பட்ட பின்னர், பெர்சாத்து அக்கூட்டணியில் இணைய ஒப்புக்கொண்டது.

அண்மையில், தேசிய கூட்டணியை வலுப்படுத்த பெர்சாத்து கட்சி, அம்னோ, பாஸ் கட்சிகளுடன் முவாபாக்காட் நேஷனலில் இணையும் என்று தெரிவிக்கப்பட்டது.

“அம்னோ, பாஸ் கட்சி உடனான ஒத்துழைப்பை உறுதிப்படுத்த இந்த சந்திப்பு ஏற்படுத்தப்பட்டது

“பிரதமர், அம்னோ தேசிய முன்னணியுடன் இணைந்து அடுத்த பொதுத் தேர்தலில் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்

“மேலும், பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலில் இணையும் என்றும் மொகிதின் தெரிவித்துள்ளார். தேர்தலின் போது தொகுதிப் பங்கீடுகள் நல்ல முறையில் நடக்க இது உதவும்” என்று வட்டாரம் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அண்மையில், நஜிப் ரசாக்கின் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி “பெரிய அளவிலான அரசியல் முடிவுகள்” எடுக்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார்.