Home One Line P1 கொவிட்19: மாத இறுதியில் 4 இலக்க எண்ணை எட்டலாம்

கொவிட்19: மாத இறுதியில் 4 இலக்க எண்ணை எட்டலாம்

537
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நோய்த்தொற்றின் மதிப்பு ஆர்ஓ (Ro) குறையாவிட்டால், இந்த மாத இறுதியில் கொவிட் -19 சம்பவங்கள் 4 இலக்க எண்ணை எட்டும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

கொவிட் -19 தொற்றின் பரிமாற்ற வேகத்தைக் கணக்கிட ஆர்ஓ பயன்படுத்தப்படுகிறது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், தற்போதைய ஆர்ஓ மதிப்பு 1.5- ஆக குறைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“நாம் 2.2 மதிப்புடன் தொடங்கினோம், ஆனால் இன்று 1.5 வீதத்திற்கு இறங்கியுள்ளோம்.

“ஆனால், இது போதுமானதாக இல்லை. 1.5 வீதம் தொடர்ந்தால், இதன் பொருள் அக்டோபர் 31 அன்று நமக்கு 4 இலக்கங்கள் கிடைக்கும், ” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதற்கிடையில், கெடாவில் செய்ததைப் போல பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் தொற்று வீதத்தின் மதிப்பை 1- க்குக் கீழே குறைக்க முடியும் என்று சுகாதார அமைச்சு நம்புகிறது என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சு 796 சுகாதார ஊழியர்களை சபாவுக்கு அணிதிரட்டியதாகவும், இதுவரை 5,000- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை தன்னார்வலர்களிடமிருந்து பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

“அவர்களில் 300 பேரை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். நாங்கள் அவர்களை நேர்காணல் செய்வோம். ” என்று அவர் கூறினார்.

தொற்று பரவுவதைத் தடுக்கவும் நோய்த்தொற்றின் வீதத்தைக் குறைக்கவும் வீட்டிலேயே தங்கி தங்கள் பங்கைச் செய்யுமாறு நூர் ஹிஷாம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.