Home One Line P1 சொத்துகளை சேமித்துள்ள பினாங்கு அரசாங்கத்திற்கு, மக்களுக்கு உதவ வழி இல்லையா?

சொத்துகளை சேமித்துள்ள பினாங்கு அரசாங்கத்திற்கு, மக்களுக்கு உதவ வழி இல்லையா?

759
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் எப்எம்டியில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பினாங்கு அரசின் மக்கள் நலன் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

31 வயதான மகேஸ்வரி கிருஷ்ணசாமி, நகராட்சிக்கு ஆறு மாத வாடகைக்கு செலுத்த வேண்டியிருப்பதால், தனது குடியிருப்பைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் நவம்பர் 30- ஆம் தேதி அவர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமது முகநூலில் பதிவிட்டுள்ள நஜிப், “சகோதரி மகேஸ்வரி கிருஷ்ணசாமிக்கு வயது 31. பினாங்கு நகராட்சிக்கு சொந்தமான ஒரு குடியிருப்பில் அவர் வசித்து வருகிறார். இந்த கட்டுரையைப் படித்ததில் மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என்று எப்எம்டியில் வெளியான பதிவு குறித்து அவர் பேசியுள்ளார்.

#TamilSchoolmychoice

“வேலை இல்லை, குழந்தைகள் பசியுடன் வெற்று கஞ்சி சாப்பிடுகிறார்கள்.
அவர் அரசாங்கத்திற்கு வாடகை செலுத்த முடியாததால் அவர் வெளியேற்றப்படுவார்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

“ஆகையால், நான் அரசாங்கத்தை கேட்கிறேன். அரசாங்கமும், நகராட்சி மன்றமும் மக்களிடமிருந்து வரிகளைப் பெறுகின்றனர். இந்த வரிப் பணத்தை ஏழைகளுக்கு பயன்படுத்தலாம்.

“பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான சொத்துகளை சேமித்துள்ள பினாங்கு அரசாங்கத்திற்கு, மக்களுக்கு உதவ வழி இல்லையென்றால் என்ன பயன் உள்ளது? ” என்று பினாங்கு மாநிலத்தை சாடியுள்ளார்.

இன்னும் நிறைய மக்கள் இது போன்று பாதிப்படைந்திருப்பார்கள் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார். அரசாங்கத் துறைகள் இது போன்ற விவகாரங்களில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கோண்டார்.

“கடந்த காலத்தில் நான் அரசாங்கத்தில் இருந்தபோது, ​​இந்த கடமையை நான் எப்போதும் நிதி அமைச்சகம் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் கொடுத்தேன்”

“எங்கள் சம்பளம் மக்களால் வழங்கப்படுகிறது. மக்களுக்கு உதவுவதே எங்கள் வேலை. கஞ்சத்தனமாக இருக்காதீர்கள், பல்வேறு நிபந்தனைகளை விதிக்க வேண்டாம். தேவைப்படும் அனைவருக்கும் உதவுங்கள் ” என்று அவர் தெரிவித்தார்.