Home One Line P1 அன்வார், நம்பிக்கைக் கூட்டணியுடன் ஒத்துழைப்பு இல்லை!

அன்வார், நம்பிக்கைக் கூட்டணியுடன் ஒத்துழைப்பு இல்லை!

573
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அல்லது நம்பிக்கைக் கூட்டணியுடனும், குறிப்பாக ஜசெக உடனான எந்தவொரு ஒத்துழைப்பையும் நிராகரிக்க அம்னோ இளைஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதன் தலைவரான அசிராப் வாஜ்டி டுசுகி, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஒரு பகுதியாக இருக்க விரும்பாததால் இந்த நிராகரிப்பு வந்ததாகக் கூறினார். இது பிரதமராகும் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரின் இலட்சியத்தை நிறைவேற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அன்வார் இப்ராகிம் மற்றும் நம்பிக்கைக் கூட்டணியுடன் குறிப்பாக ஜசெகவுடன் அம்னோ இளைஞர் பிரிவு ஒத்துழைப்பதை நிராகரிக்கிறது. தாம் பிரதமராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அவர்கள் இந்த திட்டத்தை ஏற்படுத்தி உள்ளனர், ” என்று அவர் முகநூல் வழியாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இயங்கலையில் நடந்த அம்னோ இளைஞர் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அஸ்ராப் விளக்கினார்.

கொவிட் -19- ஐத் தொடர்ந்து சாஹிட் “அரசியல் சண்டையை” நிறுத்துவதாக அறிவித்து மக்களுக்கு உதவ கவனம் செலுத்துவதாக அறிக்கை வெளியிட்ட பின்னர், அது இந்த அறிக்கையை வெளியிட்டது.

“கொவிட் -19 அச்சுறுத்தலையும், நாட்டின் பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும் நாடு எதிர்கொள்ளும் நேரத்தில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தப்பட வேண்டும்” என்று சாஹிட் நேற்று கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய கொவிட் -19- ஐ எதிர்த்து போராடவும், பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்கும் இது செய்யப்பட்டதாகக அவர் கூறினார்.

இப்போதைக்கு கொவிட்-19 தொடர்பான விவகாரத்தில் கவனம் செலுத்த இருப்பதாக அம்னோ முடிவு செய்துள்ளதாகவும் சாஹிட் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிகேஆர் தாங்கள் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி வெளியிட்ட அறிக்கையை  மதிப்பதாகக்  கூறியுள்ளது.

எவ்வாறாயினும், 14-வது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை தனது கட்சி தொடரும் என்று பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.

“பிகேஆர் அம்னோ தலைவர் அறிக்கையை கவனித்து மதிக்கிறது,

“அதே நேரத்தில், மக்களின் ஆணையை மீட்டெடுக்கும் நம்பிக்கைகளை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று அவர் கூறினார்.