பிரேசிலியா: இங்கிலாந்து சார்பில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனெகா முயற்சியில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி தற்போது தன்னார்வலர்களுக்கு போடப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர் ஒருவர் இறந்துவிட்டதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
ஆயினும், தடுப்பூசி சோதனை தொடரும் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. பிரேசிலில் இதுவரையிலும், 154,000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.