Home One Line P1 ஆஸ்ட்ரோ : அக்டோபர்  & நவம்பர் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : அக்டோபர்  & நவம்பர் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

576
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் எதிர்வரும் அக்டோபர்  மாத இறுதியிலும், நவம்பர் முதல் வாரத்திலும் ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம் :

திங்கள், 26 அக்டோபர்

யார் அவன் (புதிய அத்தியாயங்கள் – 18-21)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: சூர்ய பிரகாஷ், மூன் நிலா, இர்பான் சய்னி, கிருத்திகா & குபேன் மகாதேவன்

அமர் மாயாவை ஆறுதல்படுத்த முயற்சிக்கிறார். அமரும் ஆதியும் தனுஜாவின் வீட்டிற்குச் சென்று உண்மையைக் கண்டுபிடிக்கிறார்கள்.

தள்ளி போகாதே (புதிய அத்தியாயங்கள் – 14-18)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜெயகனேஷ், இந்திரா, விக்னேஷ், விமலா & புரவலன்

ரம்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு முடிவை முகில் எடுக்கிறார். சமரின் சோதனையைப் பற்றி அறிந்ததும் ரம்யா மனம் உடைந்தாள்.

புதன், 28 அக்டோபர்

நான் சிரித்தால் (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி|ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஹிப்ஹாப் தமிழா ஆதி & ஐஸ்வர்யா மேனன்

தொழில்நுட்ப (ஐடி) பையனான காந்தி சூடோபல்பாரால் அவதிப்படவே அவர் மன அழுத்த தருணங்களில் கட்டுப்பாடில்லாமல் சிரிப்பார். அவர் ஒரு சிவன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பின், மிகவும் வலிமையான ஒரு புனித ஆபரணம் அவரின் உடலில் கட்டப்படுகிறது. ஆனால், அதனை அவர் பிரிந்தால் அவருக்கு அச்சுறுத்தல் வரும்.

மார் மிட்டிங்கே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி

நடிகர்கள்: என்.டி. ராமராவ் ஜூனியர் & தமன்னா பாட்டியா

பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு இளைஞன், கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்காக பழிவாங்குகிறான்.

வியாழன், 29 அக்டோபர்

ஆங்ரேஸி மிடியும் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி

நடிகர்கள்: இர்ஃபான் கான், ராதிகா மதன், தீபக் டோப்ரியல் & கரீனா கபூர் கான்

தனது மகள் லண்டனில் படிப்பை மேற்கொள்வதற்கு முடிவு செய்யும் போது, கடின உழைப்பாளியான ராஜஸ்தானி தொழிலதிபர் அவளது கனவுகளை நனவாக்க அதிகாரத்தில் உள்ள அனைத்தையும் செய்கிறார்.

தாராள பிரபு (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி|ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஹரிஷ் கல்யாண், விவேக் & தன்யா ஹோப்

ஒரு புத்திசாலித்தனமான கருவுறுதல் கிளினிக் உரிமையாளர் ஒரு வேலையற்ற மற்றும் மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலி பையனை விந்து தானம் செய்ய ஒப்புக்கொள்ள செய்கிறார். திருமணமானப் பிறகு, அவரது செயல் அவரின் வாழ்க்கையை புரட்டிப்போடுவதோடு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

வெள்ளி, 30 அக்டோபர்

பற்ற வைத்த நெருப்பொன்று (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: தினேஷ் சதாசிவம், ஸ்மிருதி வெங்கட் & எஸ் திரு குமரன்

திருடர்கள் ஒரு டெலிவரி பையனிடமிருந்து ஒரு பார்சலைத் திருட முயற்சிக்கும்போது தடை ஏற்படுகிறது.

சனி, 31 அக்டோபர்

சொல்லி தொல (புதிய அத்தியாயங்கள் – 17-18)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன்

கிருத்திகா சில அதிர்ச்சியூட்டும் செய்திகளுடன் யுவாவை நோக்கி ஓடுகிறாள். அனைத்து பேய்களும் தங்களின் முக்கிய திட்டத்தை செயல்படுத்துகின்றன.

ஞாயிறு, 1 நவம்பர்

ஜீ குடும்பம் விருதுகள் 2020 (விருது விழா, பகுதி 1-முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235), மாலை 4 மணி [பகுதி 2 – 8 நவம்பர்] [பகுதி 3 – 15 நவம்பர்]| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

ஜீ குடும்பம் விருதுகள் 2020 என்பது ஜீ தமிழிற்காக நடத்தப்படும் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வு. மேடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி கலைஞர்களின் நேர்த்தியான படைப்புகள் மற்றும் அவர்களின் சிறந்த நடிப்புக்கான பரிந்துரைகள் மற்றும் விருதுகள் வழங்குதல் என பலவற்றை இந்த நிகழ்வு உள்ளடக்கும். விருது நிகழ்ச்சியின் முதல் பகுதியை ரசிகர்கள் ரசிப்பதோடு, முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகளை 8 மற்றும் 15 நவம்பரில் கண்டு ரசிக்கலாம்.

அழகின் அழகி 2020 (புதிய அத்தியாயம் – 8)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு

நீதிபதிகள்: டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் & தனுஜா ஆனந்தன்

உள்ளூர் மாடல்களின் (models) திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த வாய்ப்புக்களமாக அமைவதோடு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் துணைபுரியும் உள்ளூர் திறன்சாலிகள் தேர்வு.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை