Home One Line P2 ராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்

ராகா வானொலியின் இந்த வார சிறப்பு நிகழ்ச்சிகள்

540
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ராகா வானொலியில் திங்கட்கிழமை அக்டோபர் 26 தொடங்கி எதிர்வரும் வாரத்தில் ஒலியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

திங்கள், 26 அக்டோபர்

வீட்டிலிருந்து வேலை செய்தல் அல்லது சக ஊழியர்களுடன் அலுவலகத்தில் வேலை செய்தல், எதனை நீங்கள் விரும்புகிறீர்கள்?

ராகா, காலை 6-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

வீட்டிலிருந்து வேலை செய்தல் அல்லது சக ஊழியர்களுடன் அலுவலகத்தில் வேலை செய்தல், எதனை இரசிகர்கள் விரும்புகின்றனர் மற்றும் அதன் காரணங்கள் குறித்து கலக்கல் காலை குழுவினரான, சுரேஷ் மற்றும் அஹிலா ஆகியோருடன் பகிர்ந்துக் கொள்ளலாம்.

செவ்வாய், 27 அக்டோபர்

நேர்காணல்: ஊழியர்களின் உரிமைகள்

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: மனித வள அலுவலர்

ஊழியர்களின் உரிமைகள், வேலையைத் தக்கவைத்துக்கொள்ளும் நுணுக்கங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான விதிமுறைகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளும் மனித வள அலுவலரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்கலாம். நேயர்கள் அழைத்துக் கேள்விகளையும் கேட்கலாம்.

புதன், 28 அக்டோபர்

2020 பாரிஸ் ஏரியல் புகைப்பட விருது விழாவில் (Paris Aerial Photography Awards 2020) 4 விருதுகளை வென்ற மறக்கமுடியாத தருணங்கள்!

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: சிவகுமார், புகைப்படக் கலைஞர்

2020 பாரிஸ் ஏரியல் புகைப்பட விருது விழாவில் (Paris Aerial Photography Awards 2020) 4 விருதுகளை வென்ற மறக்கமுடியாத தருணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஓர் இளம் ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்கலாம்.

வியாழன், 29 அக்டோபர்

நேர்காணல்: ஒரு செய்தியின் நம்பகத்தன்மையை அறியாமல் பகிர்வதன் தாக்கம்
ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: கவிதா, மலேசிய இணைய பாதுகாப்பு பேச்சாளர்

ஒரு செய்தியின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் தகவல்களைப் பகிர்வதால் ஒருவர் எதிர்கொள்ளக்கூடிய விளைவுகளை பற்றி பகிர்ந்து கொள்ளும் மலேசிய இணைய பாதுகாப்பு பேச்சாளர் கவிதாவின் நேர்காணலை ரசிகர்கள் கேட்டு பயன் பெறலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை