Home One Line P1 மொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்

மொகிதின் யாசின் மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் சந்திக்கிறார்

606
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : மாமன்னர் ஒப்புதலுடன் நாட்டில் அவசர காலத்தைப் பிரகடனப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மொகிதின் யாசின் நாளை திங்கட்கிழமை (அக்டோபர் 26) அனைத்து மாநில மந்திரி பெசார்களையும், முதலமைச்சர்களையும் புத்ரா ஜெயாவில் சந்திக்கிறார்.

இந்த சந்திப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியும், பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவும் நாளைய கூட்டத்திற்கான அழைப்பைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

நாளைக் காலை 9.30 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை மொகிதின் யாசின் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.