Home One Line P1 மலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது

மலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது

756
0
SHARE
Ad

கோலாலம்பூர் : (மாலை 6.15 மணி நிலவரம்)

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய மலாய் ஆட்சியாளர்களின் மன்றக் கூட்டம் மாலை 5.00 மணியளவில் நிறைவடைந்தது என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது.

இந்தக் கூட்டம் அவசர காலம் பிறப்பிப்பதா இல்லையா என்ற முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட்டிருந்தது.

மாலை 5.13 மணியளவில் ஜோகூர் சுல்தானின் கார் அரண்மனை வளாகத்தில் இருந்து வெளியேறியதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற ஆட்சியாளர்களின் வாகனங்கள் வெளியேறத் தொடங்கின என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவின் வாகனம் 5.57 மணியளவில் வெளியேறியது.

இந்தக் கூட்டத்தில் கிளந்தான் சுல்தான் கலந்து கொள்ளவில்லை என நம்பப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.