Home One Line P2 ரொனால்டினோ கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார்

ரொனால்டினோ கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார்

555
0
SHARE
Ad

பிரேசிலியா: பிரேசில் காற்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ ஞாயிற்றுக்கிழமை கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“நான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன், கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளேன். அறிகுறிகள் இல்லாமல் நான் நன்றாக இருக்கிறேன், ஆனால், இதனில் இருந்து வெளியேற வேண்டும். விரைவில் மீண்டும் சந்திப்போம்” என்று ரொனால்டினோ இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.

தென்கிழக்கு பிரேசிலில் மினாஸ் ஜெரெய்ஸின் தலைநகரான பெலோ ஹொரிசொண்டேயில் ரொனால்டினோ சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்.

#TamilSchoolmychoice

1999 மற்றும் 2013- க்கு இடையில் தனது நாட்டிற்காக 97 ஆட்டங்களில் 33 கோல்களை ரொனால்டினோ அடித்துள்ளார்.

அவர் காற்பந்து துறையிலிருந்து 2018- இல் ஓய்வு பெற்றார்.