Home One Line P2 ஆஸ்ட்ரோ “அழகின் அழகி” தொடரின் இயக்குநர் மார்த்தின் ஆர். சந்திரன்

ஆஸ்ட்ரோ “அழகின் அழகி” தொடரின் இயக்குநர் மார்த்தின் ஆர். சந்திரன்

970
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவில் ஒளியேறி வரும் “அழகின் அழகி” தொடர் குறித்து அதன் இயக்குநர் மார்த்தின் ஆர். சந்திரன் (படம்) நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சில கருத்துகள் :

• அழகின் அழகி 2020 பற்றி மேலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

என்னைப் பொறுத்தவரை, அழகின் அழகி 2020 வெறுமனே வெற்றியாளர்களைத் தேடும் ஒரு அழகிப் போட்டி மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சி அல்ல. நாடு முழுவதும் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் தேர்ந்தேடுக்கப்பட்ட 20 இளம் பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், இலை மறைக் காய் போல மறைந்திருக்கும் அவர்களின் திறமைகளை கண்டறியும் ஒரு திறமை தேடலாகும்.

பெண்களைப் பற்றின ஒரே மாதிரியான கருத்துகளைத் தகர்த்தெரியும் ஒரு சில முயற்சிகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்நிகழ்ச்சி பிற இளம் பெண்களை வாழ்க்கையில் தங்கள் ஆர்வங்களைப் பின்பற்ற தூண்டும் என நம்புகிறேன்.

• ஒரு இயக்குநராக உங்கள் பின்னணி மற்றும் இந்நிகழ்ச்சியை இயக்கிய உங்களின் அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்?

#TamilSchoolmychoice

‘பேய் வேட்டை’ நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியுடன் இது எனது இரண்டாவது நிகழ்ச்சி. ‘பேய் வேட்டை’ நிகழ்ச்சியின் 13 அத்தியாயங்களில் 12 அத்தியாயங்களை இயக்குநர் கார்த்திக் ஷாமலனுடன் இணைந்து இயக்கியுள்ளேன்.

அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியீடு காணவுள்ள ஓர் உள்ளூர் திரைப்படமான ‘ஹீரோ ஃப்ரெண்ட்-உ’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளேன். அழகின் அழகி 2020 இயக்கிய எனது அனுபவங்களைப் பொறுத்தவரை, இது ஒரு ஸ்கிரிப்ட் அல்லாத ரியாலிட்டி நிகழ்ச்சி என்பதால் நான் கணிக்க முடியாத பல நிகழ்வுகளை எதிர்கொண்டேன்.

ஒவ்வொரு நாளும் எதிர்பாராத நிகழ்வுகள் தொகுப்பில் ஏற்படவே எனது முழு தயாரிப்புக் குழுவும் நானும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒன்றாக அணுகினோம். இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு சுவாரசியமான மற்றும் புதிய பார்வை அனுபவத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

நீதிபதி: டத்தின் ஸ்ரீ மணிமாலா


• நீங்கள் ஒரு பிரபல பாடகியாகவும், மலேசிய இந்திய இசைத் துறையில் நன்கு அறியப்பட்ட ஆளுமையாகவும் இருந்தீர்கள். ஒரு பாடகியிலிருந்து உள்ளூர் அழகிப் போட்டியின் நீதிபதியாக மாறிய உங்களின் மாற்றம் எவ்வாறு இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான எனது கலைத்துறை வாழ்க்கையில் இதனை ஒரு மாற்றமாக நான் கூற மாட்டேன். பாடுவதைத் தவிர நடிப்பு, மாடலிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றிருக்கிறேன். அத்துடன் சில அழகுப் போட்டிகள் மற்றும் பாடும் போட்டிகளின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளேன். இளம் திறமைகளை வளர்க்கும் அழகின் அழகி 2020 -இன் ஒரு பகுதியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

• அழகின் அழகி 2020 போட்டியாளர்களுக்கான உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் என்ன?

முதலாவதாக, அவர்களிடையே நிறைய நம்பிக்கையையும் படைப்பாற்றலையும் காண முடியும் என்றும் அவர்கள் மறைத்து வைத்திருக்கும் திறமைகளைத் வெளிக்கொணர வேண்டும் என்றும் நம்புகிறேன்.

மிக முக்கியமாக, அவர்கள் இந்த பயணத்தை அனுபவிப்பதோடு ஒரு மாடலாக தங்கள் பயணத்தைத் தொடங்க உதவும் சில அர்த்தமுள்ள மாடலிங் அனுபவத்தைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன். இந்நிகழ்ச்சி முடிவுற்றப் பின் அவர்கள் தங்கள் கனவுகளையும் ஆர்வத்தையும் தொடர இப்பயணத்தை ஒரு துவக்கமாக பயன்படுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) ‘அழகின் அழகி 2020’ நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள்.