Home One Line P2 ஆஸ்ட்ரோ : நவம்பர் 8 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : நவம்பர் 8 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

473
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் எதிர்வரும் நவம்பர் 9-ஆம் தேதி வரையில் ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம் :

திங்கள், 2 நவம்பர்

ராமராஜன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

நடிகர்கள்: தோக்கோ சத்தியா, திவ்யா நாயுடு, டத்தின் ஸ்ரீ டத்தோ கீதாஞ்சலி ஜி, விக்ரன் இளங்கோவன், குபேன் மகாதேவன் & டேவிட் அந்தோணி

திரு. ராமராஜனின் மனைவியின் இறப்பிற்கு பிறகு, அவர் தனது மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்றும் நோக்கில் தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறார். இருப்பினும், ராமராஜனின் ஆத்மா அவர்களின் நாயின் உடலில் சிக்கி எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது.

தள்ளி போகாதே (புதிய அத்தியாயங்கள் – 19-23)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜெயகனேஷ், இந்திரா, விக்னேஷ், விமலா & புரவலன்

சமர் தனக்கு ரம்யாவுடன் ஒரு மகள் இருப்பதைக் கண்டுபிடித்து ரம்யாவுக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறான்.

வியாழன், 5 நவம்பர்

சைலன்ஸ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
Astro First (அலைவரிசை 480)

நடிகர்கள்: அனுஷ்கா ஷெட்டி, மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே & சுப்பராஜு

பேச்சு குறைபாடுள்ள சாக்ஷி எனும் கலைஞர் மற்றும் பிரபல இசைக்கலைஞர் அந்தோணி ஆகியோர் ஒன்றிணைகின்றனர். அங்கிருந்து என்ன வெளிப்படுகிறது என்பது இந்த அழகான கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

மலாங்: அன்லீஷ் தி மேட்னஸ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி

நடிகர்கள்: அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர், டிஷா பதானி & குணால் கெமு

அத்வைட் கோவாவுக்கு வருகையில் ஒரு சுதந்திரமான உற்சாகமான பெண்ணான சாராவை சந்திக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு அனைத்தும் சரியாக நடக்கையில், ஒரு தருணத்தில் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. பல வருடங்கள் கழித்து, காவல்துறையினரிடம் அத்வைத் கொலை செய்யப்பட்ட நிலையில் இருக்க, ஆகாஸ் மற்றும் மைக்கல் அங்கு வருகின்றனர்.

வெள்ளி, 6 நவம்பர்

கௌதமிபுத்ர சதகர்ணி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நந்தமுரி பாலகிருஷ்ணா, ஹேமா மாலினி & ஸ்ரியா சரண்

இந்த திரைப்படம் 2-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் சதாவஹான சாம்ராஜ்யத்தின் தென்னிந்திய ஆட்சியாளரின் வாழ்க்கையை விவரிக்கின்றது.

சனி, 7 நவம்பர்

வெல்கம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஃபெரோஸ் கான், அக்‌ஷய் குமார், நானா படேகர், அனில் கபூர், கத்ரீனா கைஃப், பரேஷ் ராவல், மல்லிகா ஷெராவத் & சுனில் ஷெட்டி

ஒரு மனிதன் ஒரு அழகான பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், பின்னர் அவளுடைய சகோதரர்கள், குண்டர்கள் என்பதைக் கண்டுபிடித்தான்.

சொல்லி தொல (இறுதி அத்தியாயங்கள் – 19-20)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, சனி-ஞாயிறு |

ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன்

அனைத்து பேய்களும் இரவில் எழுந்து பிக் பாஸைக் கண்டுபிடித்தனர். போமோ மற்றும் தோயோல் ஒரு பெரிய சடங்கிற்கு தயாராகிவிட்டன.

ஞாயிறு, 8 நவம்பர்

ஜீ குடும்பம் விருதுகள் 2020 (விருது விழா, பகுதி 2-முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

தமிழ் எச்டி (அலைவரிசை 235), மாலை 4 மணி [பகுதி 3 – 15 நவம்பர்]| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

ஜீ குடும்பம் விருதுகள் 2020 என்பது ஜீ தமிழிற்காக நடத்தப்படும் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வு. மேடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி கலைஞர்களின் நேர்த்தியான படைப்புகள் மற்றும் அவர்களின் சிறந்த நடிப்புக்கான பரிந்துரைகள் மற்றும் விருதுகள் வழங்குதல் என பலவற்றை இந்த நிகழ்வு உள்ளடக்கும். விருது நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை ரசிகர்கள் ரசிப்பதோடு, மூன்றாம் பகுதியை 15 நவம்பரில் கண்டு ரசிக்களாம்.

அழகின் அழகி 2020 (இறுதி அத்தியாயம் – 9)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு

நீதிபதிகள்: டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் & தனுஜா ஆனந்தன்

உள்ளூர் மாடல்களின் (models) திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த வாய்ப்புக்களமாக அமைவதோடு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் துணைபுரியும் உள்ளூர் திறன்சாலிகள் தேர்வு. இவ்வத்தியாயத்தில், அழகின் அழகி 2020-இன் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

கலர்ஸ் ஷந்தார் ரவிவார் (புதிய அத்தியாயம் – 2)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி

தொகுப்பாளர்கள்: பார்தி & ஹர்ஷ்

செயல்கள் முதல் நகைச்சுவைகள், பிரபலங்களின் உரையாடல்கள், ஆசைகளை நிறைவேற்றுவது வரை, இந்த 2 மணி நேர வாராந்திர நிகழ்ச்சி ரசிகர்களை அதிகம் மகிழ்ச்சிப்படுத்துவதோடு அதிக எதிர்பார்ப்புகளையும் தூண்டும்.