Home One Line P2 3-வது பெரிய அணியாக உயர்வோம்!- கமல்ஹாசன்

3-வது பெரிய அணியாக உயர்வோம்!- கமல்ஹாசன்

652
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூன்றாவது கூட்டணி அமைந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“100 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களுக்கு கிடைத்த தரவுகள்படி நாங்கள் தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம். நல்லவர்கள் எல்லா கட்சிகளிலும் உள்ளனர். அவர்கள் இங்கு வர வேண்டும்,” அவர் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

“ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்கள் தனக்கு முன்கூட்டியே தெரியும்” என கமல்ஹாசன் கூறியுள்ளார். அரசியல் தொடர்பாக ரஜினிகாந்துடன் பேசி வருதாகவும் அவர் கூறினார்.