கோலாலம்பூர் : தீபாவளியை முன்னிட்டு மின்னல் வானொலியில் ஒலியேறவிருக்கும் சில சிறப்பு நிகழ்ச்சிகளின் அம்சங்களை இங்கே காணலாம்:
- “காலைக் கதிரில் ஒளிதரும் தீபாவளி புதிய இயல்பில் தீபாவளியும் நேயர்களும்”கோவிட்19 காலக் கட்டத்தில் மலேசியர்கள் தீபாவளித் திருநாளை வீடுகளுக்குள்ளேயே எளிமையாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டிய இந்த தருணத்தில், காலை 6.30 தொடங்கி 10 மணி வரையிலும், நமது காலைக் கதிரில் ஒளிதரும் தீபாவளியை மோகனோடும் திரேசாவோடும் மின்னல் கொண்டாடுகிறது.
- உல்லாசம் உற்சாகத்தில்… “குதுகல தீபாவளி சமையல்” நேயர்களின் சுவை சமையல் குறிப்பு திங்கள் தொடங்கி வெள்ளி வரை பிற்பகல் மணி 12.45 இடம்பெறும். அறிவிப்பாளர்கள் பார்வதி, குணசுந்தரி, பிரேமா, சசி மற்றும் பர்வின் ஆகியோர்களின் படைப்புகளோடு தீபாவளி கொண்டாட்டத்தை மேலும் குதூகலப்படுத்தவும் உங்கள் வீட்டில் சுவை உணவு சமைக்கவும் இந்த சமையல் குறிப்பு உதவி செய்யும். உல்லாசம் உற்சாகத்தில் இணைந்திருங்கள்.
- எண்ணங்கள் வண்ணங்களில்…திங்கள் தொடங்கி வெள்ளி வரை, “ஏதோ நினைவுகள்” தனிமையில் இனிமையை தேடும் மின்னலின் நேயர்களின் பசுமையான நினைவுகளோடு விருப்ப, பழம்பாடல்கள் பிற்பகல் 2 மணி முதல் ஒலியேறும்.
- ஆனந்த தேன்காற்று…இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆனந்த தேன்காற்று உங்கள் தீபாவளி வாழ்த்துக்காக காத்திருக்கின்றது. சொந்த ஊருக்கு செல்லாத புதிய தீபாவளியா? இந்த ஆண்டு உங்கள் தீபாவளி அனுபவங்களை ஆனந்த தேன்காற்றில் 14ம் தேதி மாலை மணி 5 தொடங்கி நேயர்கள் அழைத்து வாழ்த்தை பகிர்ந்து கொள்ளலாம்.
- தீபாவளி சிறப்பு சிறுகதை…இரவு மணி 7.15க்கு “சிறுகதை புனிதமாகிறது” எனும் தீபாவளி சிறப்பு சிறுகதை இடம்பெறும்.
- நட்சத்திர மேகத்தில்…
நட்சத்திர மேகத்தில், 13ம் தேதி சிறப்பு ‘தேடலும் தெளிவும் ஒளி தருவோம்’ என்கிற கருப்பொருளில் பாண்டிதுரையின் சந்திப்பு இடம்பெறும்.
- “கடல் கடப்போம்” …தீபாவளியன்று இரவு மணி 10.05 தொடங்கி 11.00 மணி வரை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி “கடல் கடப்போம்”. கடல் கடந்தும் கலாச்சாரம் கடக்காத மலேசியர்களின் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
- மலரும் நினைவுகள்…
மலரும் நினைவுகள் நிகழ்ச்சியில், இரவு 11.05-க்கு ஊடகத் துறையில் பணிபுரிபவர்களின் சந்திப்பு இடம்பெறும்.
- சிறப்பு வானொலி நாடகம்
அறிவிப்பாளர்களின் கலகலப்பான நடிப்போடு, 15ம் தேதி,
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 சந்திராசூரியா எழுதிய “ஒளி தருவோம்” சிறப்பு
வானொலி நாடகம் பார்வதி நாகராஜன் தயாரிப்பில் இடம்பெறும்.
- தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி “சிகரம் தொடு”
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியான ‘சிகரம் தொடு’ – பலரின் வாழ்வில் ஒளியாய் விளங்கிய சிகரம் தொடு நிகழ்ச்சியின் சிறப்பு தொகுப்பாய் மலர்கின்றது. இந்நிகழ்சியை தயாரித்து வழங்குகிறார் அறிப்பாளர் சத்யா. 16ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 10.30க்கு கேட்க மறவாதீர்கள்!
புதிய இயல்பில் தீபாவளியை கொண்டாடும் நேயர்களும் சொந்த ஊருக்குச் செல்ல இயலாத நேயர்களும் இவ்வருட ஒளிதரும் தீபாவளியை மின்னலோடு இணைந்து உவகையுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள்.
மின்னல் எப் எம் நேயர்களுக்கு தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகளை மின்னல் வானொலி நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.