Home One Line P2 ராகா அறிவிப்பாளர்கள் : சுரேஷ், அஹிலா, ரேவதி, கோகுலன் & உதயா – தீபாவளி நேர்காணல்

ராகா அறிவிப்பாளர்கள் : சுரேஷ், அஹிலா, ரேவதி, கோகுலன் & உதயா – தீபாவளி நேர்காணல்

792
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு, ராகா அறிவிப்பாளர்கள் தீபாவளியை புதிய இயல்பில் கொண்டாடுகின்றனர். பிரபலமான ராகா அறிவிப்பாளர்கள் சுரேஷ் குமார் பழனியப்பன், அஹிலா சண்முகம், ரேவதி பாவதாஸ் குமார், உதயா மற்றும் கோகுலன் இளங்கோ (கோகு) ஆகியோர் இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத் திட்டங்கள் குறித்து ராகா நேயர்களுடன் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர்:

ராகாவில் அவர்களின் பணியும், பங்களிப்பும் குறித்து:

சுரேஷ்

o சுரேஷ்: நான் 2010-இல் ராகாவில் சேர்ந்தேன். 2011-இல் ஒரு முழுநேர அறிவிப்பாளராக பதவி உயர்வு பெற்றேன். ஓர் அறிவிப்பாளராக எனக்கு சில அருமையான தருணங்கள் இருந்தன. முழுநேர அறிவிப்பாளராக எனது 10-வது ஆண்டை கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் நேசிக்கின்றேன். நான் ஒரு பகுதிநேர அறிவிப்பாளராக சனிக்கிழமைகளில் காலை அங்கத்தை சக அறிவிப்பாளர், அஹிலாவுடன் இணைந்து நடத்தினேன். முழுநேர அறிவிப்பாளர்களாக நாங்கள் பதவி உயர்வு பெற்றவுடன், தற்பொழுது, திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, ராகாவின் ‘கலக்கல் காலை’ அங்கத்தை வழிநடத்துகிறோம்.

o அஹிலா: திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை ஒலியேறும் ராகாவின் கலக்கல் காலை அங்கத்தின் அறிவிப்பாளர்களில் ஒருவர். சுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய இணை அறிவிப்பாளர், சுரேஷுடன் இணைந்து அவ்வங்கத்தை வழிநடத்தி வருகிறேன். முன்னதாக, இரவு அங்க அறிவிப்பாளராக சுமார் ஒரு வருடம் பணியாற்றினேன். ராகா அறிவிப்பாளராக இவ்வருடம் எனது 10-வது ஆண்டு.

#TamilSchoolmychoice

o ரேவதி: நான் கிட்டத்தட்ட 15 முதல் 18 ஆண்டுகளாக ராகா அறிவிப்பாளராக பணியாற்றுகிறேன். நான் முன்பு காலை அங்க அறிவிப்பாளராக பணிபுரிந்தேன். தற்பொழுது இரண்டு வார நாள் அங்கங்களை அறிவிப்பாளராக வழிநடத்தி வருக்கிறேன்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒலியேறும், வணக்கம் ராகா மற்றும் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை ஒலியேறும், “இன்னிக்கி என்னா கதை”

உதயா

o உதயா: நான் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக வானொலி அறிவிப்பாளராக பணியாற்றுகிறேன். தற்போதைய நிகழ்வுகள், ட்ரிவியா (trivia), பன்ச்-அனா ஐந்து (Punch-ana Ainthu) மற்றும் கூகிள் கூகிள் (Google Google) போன்றவற்றை உள்ளடக்கிய வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை ஒலியேறும்  ஹைப்பர் மாலை அங்கத்தை அறிவிப்பாளராக வழிநடத்தி வருகிறேன்.

o கோகுலன்: ராகாவில் ஓர் அறிவிப்பாளராக இணைந்து, சுமார் இரண்டு ஆண்டுகளாகி விட்டன. வார நாட்களில், இரவு 7 மணி முதல் 12 மணி வரை ஒலியேறும் “வாங்க பழகலாம்” எனது அங்கமாகும்.

இவ்வாண்டு உங்கள் தீபாவளி கொண்டாட்டத்தின் சில திட்டங்கள் யாவை?

o சுரேஷ்: இவ்வருட தீபாவளி கொண்டாட்டம் எனக்கு கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், எனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நானும் எனது மனைவி, குணசுந்தரியும் திருமணத்திற்குப் பிறகு எங்களது ‘தலை தீபாவளி’-ஐ கொண்டாடவுள்ளோம்.

அஹிலா

o அஹிலா: சி.எம்.சி.ஓ நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு தீபாவளி எனது உடனடி குடும்ப உறுப்பினர்களுடன் எனது சொந்த ஊரான ஜோகூரில் சிறிய அளவில் கொண்டாடப்படும்.

o ரேவதி: தீபாவளி அன்று காலையில் எனது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு சிறிய பூஜையை மேற்கொள்வேன். மேலும், மதியம் என் அம்மாவைச் சென்று சந்திப்பேன். தீபாவளி போன்ற ஒரு சிறப்பு வாய்ந்த கொண்டாட்டத்தின் போது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவது உட்பட குடும்ப பிணைப்பு எனக்கு ஒரு முக்கியமான அங்கமாகும்.

o உதயா: சி.எம்.சி.ஓ நடைமுறையில் இருப்பதால் பயணம் செய்வது உட்பட இந்த ஆண்டு அதிக திட்டங்கள் இல்லை. தீபாவளியை எனது குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிலும் மற்றும் இரசிகர்களுடன் ராகா ஸ்டுடியோவிலும் கொண்டாடுவேன்.

o கோகுலன்: இந்த ஆண்டு தீபாவளி எனக்கு சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில், சி.எம்.சி.ஓ நடைமுறையில் இருப்பதால் நான் வீடு திரும்ப முடியாது. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிந்திருக்க வேண்டிய சூழல். இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இருப்பினும், எனது பெற்றோர் அஞ்சல் சேவை வழியாக அனுப்பும் ‘முறுக்கு’ பலகாரத்தை நான் மகிழ்ச்சியாக உண்பேன்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் உங்களுக்கு எவ்வாறு வித்தியாசமாக இருக்கும் என்பதை நீங்கள் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

o சுரேஷ்: சி.எம்.சி.ஓ நடைமுறையில் இருப்பதால், குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் தீபாவளியைக் கொண்டாடுவதோடு தொலைக்காட்சி மற்றும் வானொலி இரண்டிலும் இடம்பெறும் தீபாவளி நிகழ்ச்சிகளை இரசிப்பேன்.

o அஹிலா: தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு நான் திருமணம் செய்ததால் இந்த ஆண்டின் தீபாவளி எனக்கு சற்று வித்தியாசமாக இருக்கும். புதுமணத் தம்பதிகள் தங்களின் ‘தலைத் தீபாவளி’-ஐ தங்களின் கணவர் அல்லது மனைவி மற்றும் அவரது கும்பத்தினருடன் கொண்டாடுவர். இச்சடங்கு இந்திய சமூகத்தினரிடையே மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் புனிதமானது. அதேபோல் எனக்கும் கூட இது சிறப்பு வாய்ந்தது. சடங்குகளில் ஒன்று மணமகனும், மணமகளும் மணமகளின் வீட்டில் தங்கி முதிய தலைமுறையினரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவது. எனவே, நானும் என் கணவரும் அவ்வாறே செய்வோம். எனவே, திருமணத்திற்குப் பிறகு எனது உடனடி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கணவருடன் மறக்கமுடியாத தீபாவளியாக இருக்கும்.

ரேவதி

o ரேவதி: ஒவ்வொரு வருடமும் நான் எனது குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதால் எனக்கு அதிக வித்தியாசம் இல்லை, இந்த ஆண்டும் நான் அவ்வாறே செய்வேன். என்னுடைய அதே மாவட்டத்தில் அமைந்துள்ள எனது அம்மாவின் வீட்டிற்கு சென்று அவரைச் சந்திப்பேன். முன்னதாக, என் தந்தை இருந்தபோது, நாங்கள் எங்களின் உறவினர்களைச் சந்திப்போம். ஆனால், தற்பொழுது நாங்கள் உறவினர்களை சந்திப்பதில்லை. சுமார் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்பொழுது, குடும்பங்களிடையே மட்டுமே கொண்டாடுகிறோம். தீபாவளியைக் குடும்பத்துடன் கொண்டாடுவது மற்றும் உள்ளூர் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் கண்டு களிப்பதே உண்மையான மகிழ்ச்சி என்று நான் நம்புகிறேன். நான் வெளியே செல்வதை விரும்ப மாட்டேன். மாறாக, வீட்டில் ஓய்வெடுப்பது, பிரார்த்தனை செய்வது மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதை அதிகம் விரும்புவேன். ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியன்று நாங்கள் சைவமாக இருப்பதால் வீட்டிலேயே இருக்க விரும்புவோம். தீபாவளியின் இரண்டாவது நாளில் ‘சஷ்டி விரதம்’, மற்றும் மூன்றாம் நாளில் சுமார் இரண்டு மாதங்களுக்கு ‘ஐயப்பன் விரதம்’ எடுப்போம். அதுமட்டுமின்றி, நல்லெண்ணச் செயலாக ஆதரவற்றோர் இல்லத்துடன் பகிர்ந்து கொள்ள சில சுவையான உணவுகளை நாங்கள் தயார் செய்வோம்.

o உதயா: இந்த ஆண்டின் தீபாவளி எனக்கு 360 பாகை வித்தியாசமாக இருக்கும். கடந்த ஆண்டுகளைப்போல இருக்காது. மேலும், சி.எம்.சி.ஓ நடைமுறையில் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நான் தீபாவளியை சிறிய அளவில் கொண்டாடுவேன்.

o கோகுலன்: நான் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாக குளுவாங்கில் தீபாவளி சந்தைக்குச் செல்வேன். அவை யாவும் மறக்க முடியாத நினைவுகள். ஏனென்றால், இந்த ஆண்டு நான் சொந்த ஊருக்கு திரும்பவில்லை.

உங்களின் தீபாவளி செய்தி/வாழ்த்துக்களை உங்கள்/ராகா இரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

o சுரேஷ்: தீபாவளியைப் பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள். நீங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்கத் திட்டமிட்டால், முதலில் உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். மேலும், அதிக உணவை உண்ணுங்கள்.  அன்பானவர்களுடன் ஓர் அற்புதமான நேரத்தை அனுபவித்து மகிழுங்கள்.

o அஹிலா: தீபாவளி என்றாலே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக இருப்பதுதான். ஆனால் இந்த ஆண்டு விஷயங்கள் சற்று மாறுபட்டுள்ளது. ஏனெனில் முன்பைப் போல அதிக அளவில் உறவினர்களைச் சந்திக்க முடியாது. ஆனால், குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டியுள்ளது. எண்ணிக்கை அப்பாற்பட்டு குடும்பத்தினருடன் இணைந்திருப்பதே மிக முக்கியமான ஒன்று. எனவே, இவ்வினிமையான தருணங்களை நேசிப்போம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

o ரேவதி: நமது வாழ்நாள் காலம் நமக்குத் தெரியாது. எனவே, அன்போடு வாழ்வோம், நமது ஆசீர்வாதங்களைத் தழுவி, குடும்ப பிணைப்பை மேம்படுத்துவோம்.

o உதயா: உங்கள் அன்புக்குரியவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுங்கள். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள், மிக முக்கியமாக, வீட்டிலேயே இருங்கள்.

கோகுலன்

o கோகுலன்: எனது அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வளமான தீபாவளி வாழ்த்துக்களை கூற விரும்புகிறேன். அனைவரின் நல்வாழ்வுக்காக சி.எம்.சி.ஓவைப் பின்பற்றும் அதே வேளையில் இந்த ஆண்டு தீபாவளியை மிகுந்த அன்புடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட என் இரசிகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

நவம்பர் 13, இரவு 8 மணிக்கு பிரபலமான உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட ராகாவின் தீபாவளி கொண்டட்டம் 2020 எனும் மெய்நிகர் இசை நிகழ்ச்சியை ராகாவின் முகநூல் வழியாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

இலவச SYOK செயலியின் வழி எங்கும், எப்போதும் ராகாவை பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.