Home One Line P1 தேசிய மிருகக்காட்சி சாலைக்கு நிதி உதவி தேவைப்படுகிறது

தேசிய மிருகக்காட்சி சாலைக்கு நிதி உதவி தேவைப்படுகிறது

716
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றின் மூன்றாவது அலை காரணமாக வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலை தெரிவித்துள்ளது. இந்த நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால், விலங்குகளுக்கு உணவு வழங்குவது போன்ற விசயங்கள் தடைப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

மிருகக்காட்சிசாலையின் விலங்கியல், கால்நடை மற்றும் பாண்டா பாதுகாப்பு மைய இயக்குனர் டாக்டர் மாட் நைம் ராம்லி இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இந்த நிதி போதுமான இருக்கும் என்று கூறினார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட்டதிலிருந்து மிருகக்காட்சிசாலையை மூடியது, இயக்கச் செலவுகளை பாதித்ததாக அவர் கூறினார். இது மாதத்திற்கு மொத்தம் 1 மில்லியன் ரிங்கிட் வரை ஆகும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஊதியம் 400,000 ரிங்கிட் , உணவு மொத்தமாக 350,000 ரிங்கிட் மற்றும் பயன்பாடுகள் 180,000 ரிங்கிட்டுக்கு வரும் என்று அவர் கூறினார்.

சமீபத்தில், இஸ்லாமிய போதகர், எபிட் லியூ, உதவி கோரிக்கைக்கு உடனடியாக உதவினார். மிருகக்காட்சிசாலையின் விலங்குகளுக்கு உணவளிக்க 200 கிலோ இறைச்சி மற்றும் 500 கிலோ பழம் மற்றும் காய்கறிகளை நன்கொடையாக அவர் வழங்கினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் ஆரம்ப கட்டத்தில், மிருகக்காட்சி சாலை விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தின் மூலம் 5,137 விலங்குகளின் பராமரிப்பிற்கு பணம் செலுத்த முடிந்தது என்று டாக்டர் மாட் நெய்ம் கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் வழங்கிய 1.3 மில்லியன் ரின்கிட் ஒரு மாதத்திற்கு மட்டுமே இயக்கச் செலவுகளை ஈடுசெய்ய முடிந்தது. 689,000 ரிங்கிட் பாண்டா காப்பீட்டிற்காகவும், மீதமுள்ளவை விலங்குகள் உணவு மற்றும் மருத்துவ செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன என்று அவர் கூறினார்.

கொவிட்-19 தொற்றின் முதல் அலைகயின் போது, அரசாங்கம் பல உயிரியல் பூங்காக்களுக்கு உதவியது என்று அவர் கூறினார், “ஆனால் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அக்டோபர் 14- ஆம் தேதி தொடங்கியதிலிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.” என்று அவர் குறிப்பிட்டார்.

“மிருகக்காட்சிசாலைகள் அவற்றின் அதிக இயக்க செலவுகளை நிர்வகிக்க உதவும் சிறந்த வழியை அரசாங்கம் இன்னும் கூடுதலாக செயல்படுத்தி இருக்கலாம்.”

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன என்று டாக்டர் மாட் நெய்ம் கூறினார். உதவதற்கான கூடுதல் தகவலுக்கு, www.zoonegaramalaysia.my/adopt.html என்ற அகப்பக்கத்தைக் காணலாம்.