Home One Line P1 அக்டோபர் மாதத்தில் கார் விற்பனை அதிகரித்துள்ளது!

அக்டோபர் மாதத்தில் கார் விற்பனை அதிகரித்துள்ளது!

530
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் வாகன விற்பனை இந்த ஆண்டு அக்டோபரில் 5.2 விழுக்காடு உயர்ந்து 56,670 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 53,870 வாகனங்களாக இருந்தது என்று மலேசிய வாகன சங்கம் (எம்ஏஏ) தெரிவித்துள்ளது.

பயணிகள் வாகனங்களின் விற்பனை 2019 அக்டோபரில் 48,987- ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020 அக்டோபரில் 51,795 வாகனங்களாக உயர்ந்தது. வணிக வாகனங்களின் விற்பனை 4,883- லிருந்து 4,875- ஆக குறைந்துள்ளது.

மாத அடிப்படையில், 2020 அக்டோபருக்கான விற்பனை அளவு, செப்டம்பரை விட 0.4 விழுக்காடு உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

“அக்டோபரில் அதிக விற்பனை அளவு, புதிய மாதிரிகளின் அறிமுகம் மற்றும் கார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு ஊக்குவிப்பு பிரச்சாரங்கள் காரணமாக ஏற்பட்டது” என்று சங்கம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களின் விற்பனை, கடந்த ஆண்டு இதே காலத்தில் 496,855- லிருந்து 398,159 வாகங்களாக சரிந்தது.

மொத்த உற்பத்தியைப் பொறுத்தவரை, 2020 அக்டோபரில் 58,631 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 55,775 வாகனங்கள் வெளியாகின.

பெர்லிஸ், பகாங் மற்றும் கிளந்தானைத் தவிர மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதால், நவம்பர் மாதத்திற்கான விற்பனை அளவு அக்டோபரை விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.