Home One Line P1 இந்தியா: அடுத்த 4 மாதங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து தயாராக இருக்கும்!

இந்தியா: அடுத்த 4 மாதங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து தயாராக இருக்கும்!

490
0
SHARE
Ad

புது டில்லி: அடுத்த மூன்று, நான்கு மாதங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து தயாராக இருக்கும் என்று தாம் நம்புவதாக இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹார்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

“அடுத்த மூன்று நான்கு மாதங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து தயாராக இருக்கும் என்று நான் நம்புகிறேன். விஞ்ஞான தரவுகளின் அடிப்படையில் தடுப்பு மருந்துக்கான முன்னுரிமை வடிவமைக்கப்படும். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொவிட்-19 தொற்று எதிர்ப்பு வீரர்கள், முதியவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னுரிமை பெறுவார்கள்.

“தடுப்பு மருந்து வழங்குவதற்கு மிகவும் விரிவான திட்டமிடல் நடந்து வருகிறது. அதற்கான வரைபடத்தைப் பற்றி விவாதிக்க ஈ-தடுப்பு மருந்து நுண்ணறிவு தளம் உருவாக்கப்பட்டுள்ளது, “என்று அமைச்சர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

2021 ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள், 25- 30 கோடி மக்களுக்கு 400- 500 மில்லியன் மருந்துகள் கிடைக்கும் என்று வர்தன் மேலும் மதிப்பிட்டுள்ளார்.