Home One Line P1 புதிய மதுபான உரிமம்: மதுபானம் வாங்குவதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதற்காக இல்லை!

புதிய மதுபான உரிமம்: மதுபானம் வாங்குவதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதற்காக இல்லை!

731
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய மதுபான உரிமம் (எல்எம்கே) வழிகாட்டுதல்கள் மதுபானம் வாங்குவதற்கான உரிமையை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, மாறாக மதுபானங்களின் விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாகும் என்று கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) தெரிவித்துள்ளது.

டிபிகேஎல் கலால் வாரியத் தலைவர் லாவ் பெங் வீ கூறுகையில், மதுபானம் விற்பனை மற்றும் கொள்முதல் இன்னும் மதுபான விடுதிகள், ஓய்வறைகள் மற்றும் உணவகங்களில் விற்கலாம் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

பேரங்காடிகள், வணிக வளாகங்களில் அமைந்துள்ள கடைகள் போன்ற இடங்களில் உரிமம் பெற்று விற்கலாம்.

“புதிய மதுபான உரிமம் (எல்எம்கே) வழிகாட்டுதல்கள் மதுபானங்களின் விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதோடு நகரவாசிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வசதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. வளாகத்தின் வகை மற்றும் விற்பனை நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தரமான மதுபான விற்பனையை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

கலப்பு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக அல்லது பாரம்பரிய மருத்துவத்திற்காக வகைப்படுத்தப்பட்ட மதுபானங்கள், சுகாதார அமைச்சினால் அனுமதிக்கப்படுகிறது. இது சீன மருந்துக் கடைகளில் விற்கப்படலாம்.

“இது தவிர, மதுபானங்களை வழங்கும் விளம்பர நடவடிக்கைகள் நிகழ்வுகளுக்காகவும், பண்டிகை காலத்திலும் தற்காலிக உரிமங்கள் வழங்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

நவம்பர் 16- ஆம் தேதி, டிபிகேஎல் மதுபான உரிமங்களைப் பற்றிய புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது. மளிகைக் கடைகள் மற்றும் பிற கடைகள் அடுத்த ஆண்டு முதல் மதுபானப் பொருட்களை விற்க அனுமதிக்கப்படாது என்று அது விதித்திருந்தது.