Home One Line P2 ஆஸ்ட்ரோ – எஸ்.பி.எம் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் கருத்தரங்கம் நடத்துகிறது

ஆஸ்ட்ரோ – எஸ்.பி.எம் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் கருத்தரங்கம் நடத்துகிறது

583
0
SHARE
Ad

(எஸ்.பி.எம் மாணவர்களின் மீள்பார்வைக்கு உதவும் நோக்கில் ஆஸ்ட்ரோ ‘Pelan A+ SPM’ கருத்தரங்கைத் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களின் அனுபவமிக்க ஆசிரியர்களிடமிருந்து உதவிக்குறிப்புகள், நுட்பங்கள் மற்றும் முன்கணிப்புத் தலைப்புகளைப் பெறுங்கள்)

கோலாலம்பூர் – Sijil Pelajaran Malaysia (எஸ்.பி.எம்) மாணவர்கள் மீள்பார்வை செய்வதற்கான கூடுதல் ஊடகமாக, ஆஸ்ட்ரோ, Pelan A+ SPM என்ற தலைப்பிலான கருத்தரங்குகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நவம்பர் 13 முதல், ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு Astro Tutor TV SPM (அலைவரிசை 603)-இல், மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு உள்ளிட்ட பாடங்களின் 2 மணி நேர கருத்தரங்குகளில் மாணவர்கள் ‘கலந்துக் கொள்ளலாம்’.

#TamilSchoolmychoice

கணிதத்திற்கு திரு ஷங்கர், அறிவியலுக்கு டாக்டர் ஜெய் மற்றும் டாக்டர் மெல்லிசா, வரலாற்றிற்கு திரு ரோஸ்லி மற்றும் திரு மைக் மகேன், மலாய் மொழிக்கு திரு சுகுஸ், மற்றும் ஆங்கிலத்திற்கு செல்வி ஜொவான்னா என அனுபவங்கள் நிறைந்த ஆசிரியர்களிடமிருந்து உதவிக்குறிப்புகள், நுட்பங்கள் மற்றும் முன்கணிப்புத் தலைப்புகளை Pelan A+ SPM வழங்குகிறது. அனைத்துக் கருத்தரங்குகளும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் மூலமாகப் பார்க்கலாம்.

கற்றலுக்கான ஊடகம் தற்பொழுது எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால், எஸ்.பி.எம் தேர்வை விரைவில் எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மத்தியில் கற்றலுக்கான ஆர்வம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மேன்மைப்படுத்தப்படலாம் என்று ஆஸ்ட்ரோ நம்புகிறது. சமீபத்திய அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, 2021-ஆம் ஆண்டில் தங்களின் எஸ்.பி.எம் தேர்வுகளை எழுதவிருக்கும் படிவம் 5 மாணவர்களின் கல்வி செயல்திறனைச் சிறப்பிக்க உதவும் வண்ணம் ஆஸ்ட்ரோவின் முயற்சிதான், Pelan A+ SPM.

சிசிலியா வோங், Astro Tutor TV -இன் தலைவர் கூறுகையில், “Astro Tutor TV அலைவரிசைகளின் வழி (யுபிஎஸ்ஆருக்கு 601 அலைவரிசை; பிடி3க்கு 602 அலைவரிசை மற்றும் எஸ்.பி.எம்-க்கு 603 அலைவரிசை) என ஆரம்பத்திலிருந்தே தொலைக்காட்சி வழியான கற்றல் நடவடிக்கை ஆஸ்ட்ரோவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்ட நடமாட்டக் காட்டுப்பாட்டு ஆணை (சிஎம்சிஓ) காரணமாக, ‘மெய்நிகர் கற்றல்’ முறையைப் பல பள்ளிகள் மாணவர்களுக்கானக் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையாக தேர்ந்தெடுத்துள்ளன. பள்ளிகள் மூடப்படுள்ள வேளையில் ‘மெய்நிகர் கற்றல்’ முறை மாணவர்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்க முடியும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், அக்கற்றல் நடவடிக்கையில் பங்கு பெற சில மாணவர்களுக்கு சுய கணினிகளும் முறையான இணைய வசதியும் இருக்காது.

‘மெய்நிகர் கற்றல்’ முறையில் ஒரு சில வரம்புகள் உள்ளதால் மலேசிய மாணவர்களுக்கானக் கற்றல் நடவடிக்கையை ஆஸ்ட்ரோ மேலும் எளிதாக்குவதோடு பன்முகப்படுத்துகிறது. அவற்றுள் ஒன்றுதான் Pelan A+ SPM கருத்தரங்குகள். இதன்வழி, மாணவர்கள் தங்களது மீள்பார்வைகளை தொலைக்காட்சி வழியாகச் செய்வதோடு பிரத்யேகக் கருத்தரங்குகளில் இலவசமாகவும் ‘கலந்துக் கொள்ளலாம்’. இக்கருத்தரங்குகள் தங்கள் குழந்தைகளின் கல்விச் செயல்திறன்களைக் குறித்த பெற்றோரின் கவலையைத் தணிக்க உதவுவதோடு, எஸ்.பி.எம் மாணவர்களை அவர்களின் தேர்வுகளுக்கு தயார்படுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

Pelan A+ SPM கருத்தரங்கிற்கான கால அட்டவணை பின்வருமாறு:

நவம்பர் 13 முதல், ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு Astro Tutor TV SPM (அலைவரிசை 603)-இல் Pelan A+ SPM கருத்தரங்குகளைக் கண்டு மகிழுங்கள். மாணவர்கள் கருத்தரங்குகளை ஆன் டிமாட்ண்டில் கண்டு பயன் பெறலாம் அல்லது ஆஸ்ட்ரோ கோ செயலியை பதிவிறக்கம் செய்து Tutor TV அலைவரிசைகளை எங்கும் எப்போதும் கண்டுப் பயன் பெறலாம்.