Home One Line P2 நிவர் பயல்: பெரும் சேதங்களை ஏற்படுத்தலாம்

நிவர் பயல்: பெரும் சேதங்களை ஏற்படுத்தலாம்

532
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தையும் புதுச்சேரியையும் இன்று புதன்கிழமை முதல் தாக்கும் எனும் நம்பப்படும் நிவர் புயல் தற்போது கடலூருக்கு தென் கிழக்கே 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

புதுச்சேரியிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் இது அதி தீவிர புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு (இந்திய நேரப்படி) கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த புயலால் பெரும் சேதங்கள் ஏற்படாலம் என இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் 19 வாயில்களில், 7 வாயில்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நீர்த்தேக்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிவர் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு மற்றும் பொது மக்களுக்கு உதவ இராணுவம் தயாராக உள்ளது.