Home One Line P1 தியோ பெங் ஹோக் மரணம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

தியோ பெங் ஹோக் மரணம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

537
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2009-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று இறந்து கிடந்த தியோ பெங் ஹோக்கின் வழக்கு தொடர்பான விசாரணையை மலேசிய காவல் துறை மீண்டும் தொடங்கி உள்ளது. இது தண்டனைச் சட்டம் பிரிவு 342 ன் கீழ் விசாரிக்கப்படும்.

பிப்ரவரி 24-ஆம் தேதி விசாரணைக் கட்டுரை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், விசாரணையைத் தொடருமாறு காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் உள்துறை அமைச்சு கூறியது.

“முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் விசாரணைக் கட்டுரையை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“13 சாட்சிகளின் பதிவை காவல் துறையினர் நடத்தியுள்ளனர். விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது,” என்று அமைச்சு கூறியது.

ஷா ஆலாமில் உள்ள பிளாசா மாசலாம் கட்டிடத்தின் 14 வது மாடியில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் சாட்சியமளித்த பின்னர், அதே கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில், ஜூலை 16 அன்று தியோ இறந்து கிடந்தார்.