Home One Line P1 ஜாசா, ‘ஜே-கோம்’-ஆக பெயர் மாற்றம் காண்கிறது

ஜாசா, ‘ஜே-கோம்’-ஆக பெயர் மாற்றம் காண்கிறது

622
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிறப்பு விவகாரங்கள் துறையை (ஜாசா) சமூக தொடர்புத் துறை (ஜே-கோம்) என மாற்றியமைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

ஜே-கோமின் குறிக்கோள், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே இருவழி தகவல்தொடர்புகளை உருவாக்குவதே ஆகும். அதாவது துல்லியமான, உண்மையான மற்றும் புத்திசாலித்தனமான அரசாங்க தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதும், அத்துடன் மக்களிடமிருந்து கருத்துகளை கேட்பதும் ஆகும்.

“சமூகத்தை உருவாக்கும் அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக அடிமட்ட மட்டத்தில், அறிவு, மின்னியல் திறன்கள் மற்றும் ஒரு ‘சமூக வலுவூட்டல்’ மூலம் தேசபக்தியின் அர்த்தத்தையும், கவனத்தையும் பாராட்டும் சமூகத்தை உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது,” என்று அவர் மக்களவையில் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜே-கோமின் செயல்பாடும் தகவல் துறையிலிருந்து (ஜெபான்) வேறுபட்டது என்றும் சைபுடின் தெரிவித்தார். இந்நேரத்தில் ஜே-கோமின் முக்கிய பணி கொவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து புதிய இயல்பை நெறிபடுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதாகும்.

ஜெபான், தகவல் தொடர்புக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அரசாங்க கொள்கைகள், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.