Home One Line P2 ராகா வானொலியின் சிறப்பு நிகழ்ச்சிகள்

ராகா வானொலியின் சிறப்பு நிகழ்ச்சிகள்

842
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ராகா வானொலியில் அடுத்த சில நாட்களுக்கு ஒலியேறவிருக்கும் சில சிறப்பு நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

வியாழன், 26 நவம்பர்

நேர்காணல்: சர்வதேச ஆண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

விருந்தினர்: கேப்டன் அறிவானந்தன், Wealth-IQ-Network Sdn Bhd-இன் தோற்றுனர் மற்றும் இயக்குநர்

மக்கள் தற்கொலை செய்துக்கொள்வதற்கானக் காரணங்கள், மனநலம், எதிர்மறையை எதிர்த்துப் போராடுவதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் பல பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ளும் Wealth-IQ-Network Sdn Bhd-இன் தோற்றுனர் மற்றும் இயக்குநர், கேப்டன் அறிவானந்தனின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம்.

திங்கள், 30 நவம்பர்

கோவிட்-19 தொற்றுநோயின் படிப்பினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

கோவிட்-19 தொற்றுநோயின் படிப்பினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய விபரங்களை ரசிகர்கள் கலக்கல் காலை குழுவினரான, சுரேஷ் மற்றும் அஹிலாவுடன் தொடர்புக் கொண்டு பகிர்ந்துக் கொள்ளலாம்.

செவ்வாய், 1 டிசம்பர்

இணைய வகுப்புகளில் கலந்துக்கொள்வதினால் ஏற்படும் சிரமங்கள்

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தங்களது குழந்தைகள் இணைய வகுப்புகளில் கலந்துக்கொள்வதினால் ஏற்படும் சிரமங்களைப் பற்றிய விபரங்களை இரசிகர்கள் கலக்கல் காலை குழுவினரான, சுரேஷ் மற்றும் அஹிலாவுடன் தொடர்புக் கொண்டு பகிர்ந்துக் கொள்ளலாம்.

புதன், 2 டிசம்பர்

நேர்காணல் 1: இணைய வகுப்புகளில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்காக பள்ளிகள் எடுக்கும் நடவடிக்கைகள்

நேர்காணல் 2: ஈபிஎஃப் (EPF) கணக்கு 1-லிருந்து பணத்தைப் பெறுவதற்கான நடைமுறைகள்

ராகா, காலை 8-9 மணி | காலை 9-10 மணி |SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: அதிகாரி, மலேசியக் கல்வி அமைச்சு | அதிகாரி, பணியாளர், ஊழியர் சேமநிதி வாரியம் (ஈபிஎஃப்)

மாணவர்கள் இணைய வகுப்புகளில் கலந்துக் கொள்வதை உறுதி செய்ய பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் கையாளும் யுத்திகளைப்  பற்றின விபரங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் மலேசியக் கல்வி அமைச்சிலிருந்து வருகை புரிந்த அதிகாரியின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம். மேலும், ஈபிஎஃப் (EPF) கணக்கு 1-லிருந்து பணத்தைப் பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ளும் பணியாளர் ஊழியர் சேமநிதி வாரியம் (ஈபிஎஃப்) அதிகாரியின் நேர்காணலை இரசிகர்கள் கேட்கலாம்.

வியாழன், 3 டிசம்பர்

‘நெகிழிப் பைகளுக்கு தடை’ பிரச்சாரம்

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

‘நெகிழிப் பைகளுக்கு தடை’ பிரச்சாரம் மற்றும் ஒவ்வொரு நெகிழி பைக்கும் விதிக்கப்படும் 20 காசு கட்டணம் பற்றிய தங்களது ஆக்கப்பூர்வமானக் கருத்துக்களை இரசிகர்கள் கலக்கல் காலை குழுவினரான, சுரேஷ் மற்றும் அஹிலாவுடன் தொடர்புக் கொண்டு பகிர்ந்துக் கொள்ளலாம்.

வெள்ளி, 4 டிசம்பர்

ராகாவின் மலேசிய நட்சத்திரத்துடன் ஒரு நாள்

ராகா, இன்ஸ்டாகிராம் | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

ராகாவின் மலேசிய நட்சத்திரமான நடிகர் சூர்யா பிரகாஷ் இடம்பெறும் இன்ஸ்டாகிராம் நேரலையில் இரசிகர்கள் கலந்து சிறப்பிக்கலாம். அவர் உள்ளூர் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைப் பற்றிய சுவாரசியமானத் தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வார்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை