Home One Line P2 மேலும் 43 சீன குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்தது

மேலும் 43 சீன குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்தது

838
0
SHARE
Ad

புதுடில்லி  : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் எல்லைப்புற மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் வணிகங்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன.

தேசியப் பாதுகாப்பு என்ற காரணம் கூறி இந்தியா தற்போது மேலும் 43 சீன குறுஞ்செயலிகளைத் தடை செய்திருக்கிறது. இதனை இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் இன்று புதன்கிழமை (நவம்பர் 25) உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் இத்தகையச் செயல்களுக்கு நாங்கள் கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கின்றோம் என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 43 குறுஞ்செய்திகளை தடை செய்வதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. இதில் பெரும்பாலானவை சீன நாட்டு குறுஞ்செயலிகள் ஆகும். சீனாவின் மாபெரும் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா தளத்தில் இயங்கும் பல குறுஞ்செய்திகளும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் அலிபாபா நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரையில் அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

இதுவரையில் இந்தியா, டிக் டாக் உள்ளிட்ட சுமார் 200 குறுஞ்செயலிகளை கடந்த 5 மாதங்களில் தடை செய்திருக்கின்றது இதில் பெரும்பான்மையானவை சீன நாட்டு குறுஞ்செயலிகள் ஆகும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிகத்தின் மதிப்பு சுமார் 80 மில்லியன் டாலர் என மதிப்பிடப்படுகிறது. ஆசியாவின் இருபெரும் நாடுகளான இந்தியா-சீனா இடையில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றாலும், அந்த இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பகைமையும் அவநம்பிக்கையும் இன்னும் தீரவில்லை.

சீன நாட்டு பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கங்களும் இந்தியாவில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.