Home One Line P1 ‘அஸ்மினின் கூற்று தவறு- திட்டம் தீட்டியது நானில்லை!’- மகாதீர்

‘அஸ்மினின் கூற்று தவறு- திட்டம் தீட்டியது நானில்லை!’- மகாதீர்

589
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அஸ்மின் அலி கூறியது போல, தேசிய கூட்டணியை உருவாக்க தாம் திட்டம் தீட்டவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

தாம் இது குறித்து பலமுறை தெளிவுபடுத்திவிட்டதாகவும், தேசிய கூட்டணியில் ஊழல்வாதிகளும், அம்னோவும் இருப்பதால், அதில் இடம்பெற தாம் எண்ணம் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

அப்படி தாம் தேசிய கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்தால், அது சாத்தியப்படும் போது, ஏன் அதிலிருந்து விலகினார் என்ற கேள்வியை துன் மகாதீர் முன்வைத்தார்.

#TamilSchoolmychoice

தேசிய கூட்டணி அமைப்பதற்காக, நம்பிக்கை கூட்டணியிலிருந்து வெளியேற திட்டம் தீட்டியது, அஸ்மின் அலியும், மொகிதின் யாசினும்தான் என்று ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மறந்துவிடாதீர்கள், இது யாவும் நடந்து கொண்டிருக்கும் போது, அஸ்மினின் நிலை பிகேஆரிலும், நம்பிக்கை கூட்டணியிலும் கேள்விக்குறியாய் இருந்தது. அன்வாரும் அவரின் ஆதரவாளர்களும் அஸ்மினை வீழ்த்த பிகேஆர் கட்சித் தேர்தலிருந்தே முயற்சி செய்தனர். அன்வார் வெளிப்படையாக ரபிசி ராம்லியை ஆதரித்தார். மேலும், அஸ்மின் அலியின் ஓரிணச்சேர்க்கை காணொலியும் வெளியாகி நிலைமையை மோசமாக்கியது,’ என்று மகாதீர் தெரிவித்தார்.

இதனால்தான், அஸ்மின் ஷெராட்டன் நகர்வை முன்னெடுத்தார். அவர் அதனை முன்னெடுத்தக் காரணம் ஒன்றுதான், அன்வாரை பிரதமராக்குவதிலிருந்து தடுப்பது. நம்பிக்கை கூட்டணி தொடர்ந்து ஆட்சியில் இருந்தால், கண்டிப்பாக அன்வார் பிரதமராகிவிடுவார் என்ற அச்சம் அவருக்கு இருந்ததாக மகாதீர் கூறினார்.