Home One Line P1 ஊதிய மானிய திட்டம்: 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

ஊதிய மானிய திட்டம்: 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் தாக்கத்தின் போது, 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழப்பதை அரசாங்கத்தின் ஊதிய மானிய திட்டம் தடுத்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார்.

நவம்பர் 6- ஆம் தேதி வரை இந்த திட்டம் 331,950 முதலாளிகளுக்கும், 2.7 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கும் பயனளித்துள்ளது என்று அவர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலில் கூறினார். இத்திட்டத்தின் கீழ் 12.21 பில்லியன் ரிங்கிட் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“இதற்கிடையில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 6 வரை ஊதிய மானிய திட்டம் 2.0 க்கு, 611,276 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட முதலாளிகளிடமிருந்து 61,382 விண்ணப்பங்களை சோக்சோ பெற்றது. 122.19 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிதி உதவிகள் முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் 3.3 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை வேலை இழக்காமல் வெற்றிகரமாக காப்பாற்றி உள்ளது. இத்திட்டம் டிசம்பர் இறுதி வரை நீட்டிப்பது அதிக முதலாளிகளுக்கும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது,” என்று சரவணன் கூறினார்.