கோலாலம்பூர்: மக்களவையில் மேலும் இரண்டு அமைச்சகங்களின் வரவு செலவுத் திட்ட குழு அளவிலான விவாதத்தில் குரல் வாக்கெடுப்புடன் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவை உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகம் ஆகியவ்சை அடங்கும்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தைப் பொறுத்தவரை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஆட்சேபனை தெரிவிப்பதைக் கேட்க முடிந்தது.
இருப்பினும், மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் இதை “ஒருமனதாக” நிறைவேற்றப்படுவதாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக, அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கான வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கீடுகளை எண்ணிக்கை வாக்கெடுப்புடன் நிறைவேற்றுவதில் அரசாங்கம் வெற்றி பெற்றது.
இந்த வாரம் பதினொரு அமைச்சகங்களின் வரவு செலவுத் திட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.