Home கலை உலகம் விஜய்யின் தம்படம்தான் இந்தியாவிலேயே அதிகம் பகிரப்பட்டது

விஜய்யின் தம்படம்தான் இந்தியாவிலேயே அதிகம் பகிரப்பட்டது

659
0
SHARE
Ad

புதுடில்லி : பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் தளத்தில் இந்த ஆண்டில் இந்தியாவிலேயே மிக அதிகமாகப் பகிரப்பட்ட தம்படம் (செல்பி) எது தெரியுமா?

நடிகர் விஜய் தனது இரசிகர்களுடன் எடுத்துக் கொண்டு டுவிட்டரில் பதிவிட்ட புகைப்படம்தான் அந்த சாதனையைப் புரிந்துள்ளது.

இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் நடிகர் விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவரது படப்பிடிப்பைக் காண பெருமளவில் இரசிகர்கள் திரண்டனர். அந்த சமயத்தில்தான் அவர் மீதான வருமான வரி சோதனைகளும் நடத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

அந்த பரபரப்பான சூழ்நிலையில் அவர் நெய்வேலி இரசிகர்களுடன் தம்படம் (செல்பி) ஒன்றை எடுத்து அதைத் தனது டுவிட்டர் தளத்திலும் பகிர்ந்து கொண்டார்.

பலரும் அந்தப் படத்தைப் பகிர்ந்து கொண்டனர். அந்தப் படம்தான் இந்த வருடம் டுவிட்டரில் அதிகம் ரீ டுவிட் செய்யப்பட்ட படமாக முதல் இடத்தை பிடித்துள்ளது என டுவிட்டர் இந்தியா அறிவித்துள்ளது.