Home One Line P1 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் நஸ்ரினை சந்திப்பர்!

பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் நஸ்ரினை சந்திப்பர்!

452
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை சுல்தான் நஸ்ரின் ஷாவை திட்டமிட்டபடி சந்திக்காதது, தவறுகளைத் தவிர்ப்பதற்கு என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சந்திப்பதற்கான உத்தரவைப் பெற்ற பின்னர் அரண்மனைக்கு செல்ல அனைத்து பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

“ஆட்சியாளர் இறையாண்மையை எப்போதும் மதிக்கும் மற்றும் நிலைநிறுத்தும் ஒரு கட்சியாக பாஸ் இருக்கும். அது தொடர்பான எந்தவொரு விடயத்தையும் முழுமையாகவும் நாகரிகமாகவும் கையாள வேண்டும் என்பதை எப்போதும் உறுதி செய்கிறது. பேராக் அரண்மனை விவகாரத்தில், முடிவுகளை எடுப்பதில் பாஸ் தவறுகளை செய்ய விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பேராக் அரசியல் நெருக்கடியை மற்ற தேசிய கூட்டணி கட்சிகளுடன் விவேகத்துடன் தீர்க்க பாஸ் முயற்சிக்கும் என்று தக்கியுடின் கூறினார்.

பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று மதியம் 3 மணிக்கு இஸ்தானா கிந்தாவில் சுல்தான் நஸ்ரினை சந்திக்கவிருந்தனர்.