Home One Line P1 செப்டம்பரில் வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காட்டிற்கு குறைந்துள்ளது

செப்டம்பரில் வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காட்டிற்கு குறைந்துள்ளது

505
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த மே மாதத்தில் 5.3 விழுக்காடு அல்லது 826,100 பேராக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் அது 4.6 விழுக்காடு அல்லது 737,500 ஆக குறைந்துள்ளது என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

டிசம்பரில் வேலையின்மை விகிதம் 4.5 விழுக்காடாக குறையும் என்றும், இந்த போக்கு 2021 வரை தொடரும் என்றும் அமைச்சர் கூறினார்.

” வேலையின்மை விகிதம் மே மாதத்தில் மிக உயர்ந்த மட்டமான 5.3விழுக்காட்டிலிருந்து 4.9 விழுக்காடாக அல்லது ஜூன் மாதத்தில் 773,200 பேருக்கு குறைந்து வருவதைக் காணலாம். வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 745,100 பேருக்கு 4.7 விழுக்காடாக குறைந்து ஆகஸ்ட் மாதத்திலும் அப்படியே இருந்தது.

#TamilSchoolmychoice

“செப்டம்பர் மாதத்தில் சமீபத்திய கணக்கெடுப்பு தரவுபடி, வேலையின்மை விகிதம் 4.6 விழுக்காடாகக் குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. இதில் வேலையின்மை எண்ணிக்கை 737,500 பேர்,” என்று சரவணன் தெரிவித்தார்.

அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், நவம்பர் 27 வரை சமூக பாதுகாப்பு அமைப்பின் (சொக்ஸோ) வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பு (ஈஐஎஸ்) அறிவித்த பணிநீக்கங்களின் எண்ணிக்கை 99,696 பேர் என்று அமைச்சர் கூறினார்.

“அதே நேரத்தில், 372,934 வேலை தேடுபவர்களில் மொத்தம் 120,296 பேர் வேலைவாய்ப்பைப் பெற முடிந்தது. தொழிலாளர் சந்தை உட்பட பொருளாதாரத்தில் இந்த தொற்றுநோயின் எதிர்மறையான தாக்கத்தை குறைக்க அரசாங்கம் பல்வேறு தூண்டுதல் தொகுப்புகளை வழங்கியுள்ளது, ” என்று அவர் கூறினார்.