பெய்ஜிங்: கொவிட்-19 பரவத் தொடங்கி ஏறக்குறைய ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. உலகளவில் இந்த தொற்றால் 71 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
2019- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதியன்று வூஹானில் நான்கு பேருக்கு இந்த நோய் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில மணி நேரங்களிலேயே வூஹானில் 76 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.
இவ்வருடம் மே மாதம் முதல் வூஹானில் கொவிட்-19 பாதிப்பு முழுமையாக மறைந்துவிட்டது. ஆனால், இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுகள் மீது மக்களுக்கு அச்சம் நீடிக்கிறது.
தற்போது இந்த தொற்றால் அமெரிக்காவில் 16 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 300,000-க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியா இரண்டாவது இடத்தில் 9 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் மட்டுமே 140,000-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.