கோலாலம்பூர்: சிலாங்கூரில் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்படுவதை சிலாங்கூர் கொவிட் -19 சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எப்.சி) எதிர்பார்க்கிறது.
வெளிநாட்டு தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட பரிசோதனைகள் அதிகரித்ததன் காரணமாக இந்த தொற்று அதகரிப்பு ஏற்பட்டதாக எஸ்.டி.எப்.சி தலைவர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சரான சுல்கிப்ளி கூறுகையில், சில இலக்கு குழுக்கள் ஏற்கனவே கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
“அரசாங்கமும், சுகாதார அமைச்சும் நாங்கள் முன்மொழிகின்ற இரண்டு கொள்கைகளை செயல்படுத்தினால் மட்டுமே, சம்பவங்களைக் கண்டறிந்து தடுக்கும் முயற்சியை அதிகரிக்க முடியும். இந்த மூன்றாம் அலை சவாலை எதிர்கொள்ள சரியான மற்றும் ஒத்திசைவான கொள்கையின் பங்கை நாம் அங்கீகரிப்பது முக்கியம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
24 மணி நேரத்திற்குள் சிலாங்கூரில் 1,428 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வியாழக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தொற்று தொழிற்சாலை தொழிலாளர்களால் ஏற்பட்டிருந்தாலும், சமூகத்திற்கு பரவ வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரித்தார்.
இதுதொடர்பாக, சிலாங்கூர் ஒரு “சிவப்பு மண்டலம்” என்ற உண்மையை அறிந்து கொள்ளுமாறு சிலாங்கூரில் உள்ள மக்களை அவர் கேட்டுக்கொண்டார். எனவே மாநில எல்லைகளைக் கடந்து பயணம் செய்வதற்கான விருப்பத்தை மாநில மக்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.