Home One Line P1 பெர்சாத்து, அம்னோவை ஒதுக்க நினைத்தால்- நம்பிக்கை கூட்டணியுடன் கூட்டணி அமையலாம்

பெர்சாத்து, அம்னோவை ஒதுக்க நினைத்தால்- நம்பிக்கை கூட்டணியுடன் கூட்டணி அமையலாம்

592
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்தத் தேர்தலில் தேசிய கூட்டணியை ஒதுக்கி விட்டு தனியாக போட்டியிட அம்னோ தயங்காது என்று ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து கட்சி தொடர்ந்து தனது அதிகாரத்தை அதிகமாக முன்நிறுத்தினால் நம்பிக்கை கூட்டணியுடன் அம்னோ இணையலாம் என்று அவர் கூறினார்.

ஆளும் கூட்டணியில் பெர்சாத்து தன்னை முன்நிறுத்தி முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தால், அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

தேசிய கூட்டணி அரசாங்கத்தில் தன்னை ஒரு மேலாதிக்க சக்தியாக திணிக்க பெர்சாத்து மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அம்னோ உறுப்பினர்களிடையே வெறுப்பு நிலவுகிறது என்று நூர் ஜஸ்லான் கூறினார்.

ஒரு முற்போக்கான தேசமாக உலகளாவிய அங்கீகாரத்தை முன்னேற்றுவதற்கும் பெறுவதற்கும் மலேசியாவுக்கு இனரீதியாக பிரதிநிதித்துவ அரசாங்கம் தேவைப்படுவதால், அம்னோ மற்றும் பிகேஆர், ஜசெக ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பிணைப்பு மோசமான யோசனையாக இருக்காது என்று அவர் கூறினார்.

“90 விழுக்காட்டுக்கும் அதிகமான மலாய்க்காரர்களைக் கொண்ட அரசாங்கத்தை வைத்திருப்பது நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல. அரசாங்கத்தில் பதவிகளைப் பெறும்போது மலாய்க்காரரல்லாதவர்களை நாங்கள் ஒதுக்கி வைக்க முடியாது, ” என்று அவர் கூறினார்.