Home கலை உலகம் ஏழைகளுக்கு உதவுவதில் திருப்தி- விஜய்

ஏழைகளுக்கு உதவுவதில் திருப்தி- விஜய்

769
0
SHARE
Ad

vijay

சென்னை, ஏப்ரல் 17- விஜய்யின் தலைவா படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இப்படத்துக்குப்பின் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார். விஜய் அளித்த பேட்டி வருமாறு:-

என் குழந்தைகளுக்கு நான் ஒரு நண்பன் போலவே இருக்கிறேன். என் மனைவி குழந்தைகள் படிப்பை பார்த்துக் கொள்கிறார். மகன் சஞ்சய்யுடன் நானும் நிறைய விஷயங்கள் பற்றி பேசுவோம். என் படங்களின் பாடல்கள் சஞ்சய்க்கு பிடித்து இருந்தால் நிச்சயம் அது  வெற்றிபெறும்.

#TamilSchoolmychoice

நான் திரைப்படத்தில்  நடிக்க விரும்பிய போது பெற்றோர் எதிர்த்தனர். பின்னர் என் அம்மாவிடம் பேசி சம்மதிக்க வைத்தேன். பிறகு தந்தையையும் சம்மதிக்க வைத்தேன். என் மகன் சஞ்சய் நடிகனாவதற்கு சம்மதிக்க மாட்டேன். படிப்பு முக்கியம். கல்லூரி படிப்பை முடித்து விட்டு மற்றவை பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

சஞ்சய்க்கு கிரிக்கெட்டில் ரொம்ப விருப்பம். எனவே ஒரு பயிற்சியாளரை நியமித்து கிரிக்கெட் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். நடிகர் சூர்யாவும், நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். அப்போதே நாங்கள் நண்பர்கள் இப்போதும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம்.

சமூக சேவை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன். ஏழைகளுக்கு உதவுவது எனக்கு திருப்தியை அளிக்கிறது. அதில் நான் சந்தோஷப்படவும் செய்கிறேன். இவ்வாறு விஜய் கூறினார்.