Home One Line P1 தெங்கு அட்னான்: 12 மாதங்கள் சிறைத் தண்டனை, 2 மில்லியன் அபராதம்

தெங்கு அட்னான்: 12 மாதங்கள் சிறைத் தண்டனை, 2 மில்லியன் அபராதம்

500
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சோருக்கு எதிராக 12 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் சாய்னி மஸ்லான் இன்று காலை நீதிமன்ற விசாரணையின் போது இந்த தீர்ப்பினை வழங்கினார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், தண்டனையை நிறைவேற்ற ஒத்திவைக்க நீதிபதி தற்காப்பு தரப்பின் விண்ணப்பத்தை அனுமதித்தார்.

முன்னதாக, 2 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கில் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டில் தம்மை நிரபராதி என நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று நீதிபதி தெரிவித்தார்.

“சந்தேகத்திற்கு இடமில்லாமல் அரசு தரப்பு குற்றத்தை நிரூபித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு விசாரணையில் தன்னை தற்காத்துக் கொள்ள ஆதாரங்களை முன்வைக்கத் தவறிவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவரை நான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கிறேன்,” என்று சாய்னி தீர்ப்பளித்தார்.

கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, தெங்கு அட்னான் சம்பந்தப்பட்ட 1 மில்லியன் ஊழல் வழக்கில் விடுதலையின்றி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அசெட் காயாமாஸுக்குச் சொந்தமான ஹாங் லியோங் இஸ்லாமிய வங்கி காசோலை மூலம், அசெட் கயாமாஸ் செண்டெரியான் பெர்ஹாட்டின் இயக்குநராக இருக்கும் சாய் கின் காங்கிடமிருந்து தெங்கு அட்னான் 2 மில்லியனை பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றம் 2016-ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று புசாட் பண்டார் டாமான்சாரா சிஐஎம்பி கிளையில் செய்யப்பட்டுள்ளது.