வாஷிங்டன்: இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 21) வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் மிகவும் நெருக்கமாக ஒரே நேர்கோட்டில் வரப்போகின்றன.
இதனை இரவு 9 மணி (மலேசிய நேரப்படி) முதல் கண்டு இரசிக்க முடியும். சூரிய குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருக்கும் வியாழன், மற்ற கோள்களை விட மிகவும் பெரியது. பல்வேறு வாயுக்களால் சூழ்ந்துள்ள வியாழன் கோள், சூரியனின் எடையைப் போல் ஆயிரத்தில் ஒரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக சனி பெரிய கோளாக திகழ்கிறது. இந்த நிகழ்வு 20 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பது என்றாலும், இம்முறை நடக்க இருக்கும் சந்திப்பு 400 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பதால் சிறப்பு பெற்றுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. அதுவும், இரவு நேரத்ல்லி காணக்கிடைப்பது 800 வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும் என்று அது தெரிவித்துள்ளது.
பல்வேறு அறிவியல் ,வான்வியல் பக்கங்கள் இந்த நிகழ்வினை நேரலையாகக் கொண்டு வர முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.